chiranjeevi
ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே’ என்பார்கள். ராமாயண இதிகாசத்தில் அனுமன் முக்கிய பங்காற்றியிருப்பதாலும், ராமன் கதையைச் சொல்லும்போது அனுமனைத் தவிர்க்கவே முடியாது என்பதாலும்தான் அது புண்ய கதை என்று சில பெரியோர்கள் அனுமனின் பெருமையை நிலைநிறுத்துகிறார்கள்.
அனுமனின் வால் நீண்டுகொண்டே போகும், ராவணனுக்கு எதிரே அவனுக்கும் உயரமாக அந்த வாலைக் கொண்டே சிம்மாசனம் அமைத்து அதன்மேல் அமர்ந்துகொள்ளக்கூடிய அளவுக்கு நீளமானது என்கிறது ராமாயணம். அதேபோல அனுமனின் கதையும் எழுத எழுத முடிவில்லாது நீண்டுகொண்டே போகக்கூடியது என்பதுதான் உண்மை.
ராமனுடன் வாழ்ந்த அனுமன், அன்னை சீதையால் ‘சிரஞ்சீவி’ என்று ஆசிர்வதிக்கப்பட்டதால், அந்த யுகத்துக்குப் பிறகும் துவாபர யுகத்திலும், ஏன், இந்த கலியுகத்திலும் ‘வாழ்ந்து’ கொண்டிருக்கும் தனிச் சிறப்புடையவன். அதனால்தான், ராமனுடன், கிருஷ்ணனுடன், என்றும் நம்முடனும் வாழ்ந்து நம் பிரார்த்தனைகளை ராமனுக்கு அனுப்பி நம் நல்வாழ்வுக்கு வழி செய்துகொண்டிருக்கிறான் என்றும் பெரியவர்கள் சொல்கிறார்கள்.
அந்த ஆஞ்சநேயரின் காவியமே இந்த நூல். முத்தாய்ப்பாக நிறைவு அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சில ஸ்லோகங்கள் அனுமன் வழிபாட்டுக்கு உகந்தவை, படிப்போருக்குப் பலனளிக்கக்கூடியவை.
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் சுவாரஸ்யமான நூல் இது.
Reviews
There are no reviews yet.