₹40.00
சமூகநீதிக் களத்தின் சரித்திர நாயகர்களின் வரிசை – 3
டி.எம்.நாயர்
“டாக்டர் டி.எம். நாயர், சர்.பிட்டி. தியாகராய செட்டியாருடன் இணைந்துநின்று பிராமணரல்லாதார் இயக்கத்தைத் தோற்றுவித்த மாவீரர் ஆவார். தோற்றுவித்தது மட்டுமல்ல! திறம்பட இயங்கிவரச் செய்த செயல் வீரருமாவார்! திராவிடரின் நலிந்த வாழ்வை நல்வாழ்வாக்கிய உத்தமர்! சூத்திரரெனவும் பறையரெனவும் தாழ்ந்து நின்ற திராவிட சமுதாயத்தினரை மானமிகு மனிதராக்கிய சமுதாயச் சிற்பி! பிராமணரின் ஜாதிவெறியை அடக்கி, எவரும் சூத்திரன் என்றோ, பறையன் என்றோ உச்சரித்திடவும் அஞ்சும்படி செய்திட்ட அஞ்சா நெஞ்சத்தவர்!
டாக்டர் நாயர், உற்றார் உறவினருக்காகப் பாடுபட்டவரல்லர்! பணம் திரட்டப் பறந்தவரல்லர்! பட்டம் பதவிக்காகத் தொங்கியவரல்லர்! ஈட்டிய பொருளையெல்லாம் திராவிடர்தம் நல்வாழ்வுக்காகவும், அவர்தம் இயக்க வளர்ச்சிக்காகவும் செலவழித்தவர்! செலவழித்துச் இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்! திராவிடர்களின் வருங்கால நன்மைக்காகத் தம்மையே பலியாக்கிக் கொண்டவர்! இத்தகு தியாகச் செம்மலை, குணக்குன்றை, செயல் மறவரை, நாட்டுத் தொண்டரை, தியாகராயரின் நண்பரை இக்காலத் தலைமுறையினர் அறிந்து கொள்வதானது, தமது பரம்பரை வரலாற்றுச் சிறப்பினை அறிந்து கொள்ளும் அரும்பெருஞ் செயலல்லவா!
பக்கம் – 24
Delivery: Items will be delivered within 2-7 days
Art Nagarajan –
டி. எம். நாயர்.
சமூகநீதி காத்த சரித்திர நாயகன்.
திராவிட லெனின்.
1868 ஜனவரி 15ல்
கேரளாவில் ‘திரூர்’ல்
“தரவாட் மாதவன் நாயர்” பிறந்தார்.
தரவாட் என்பது
இவரது குடும்ப பெயர்.
இவரது தந்தை
சங்கரன் நாயர்
புகழ்பெற்ற
வழக்கறிஞராக இருந்து
மாவட்ட நீதிபதியாக இருந்தவர்.
டி. எம். நாயர் லண்டனில் மருத்துவப்படிப்பு முடித்து
காது, மூக்கு தொண்டை
மருத்துவ நிபுணராக
பணி புரிந்தவர்.
1904முதல் 1916வரை
சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக இருந்தார்.
சென்னை
சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.
திருவல்லிக்கேணி தெப்பக்குளத்தில்,
தொடர்ந்து தற்கொலைகளும்,
சுகாதார சீர்கேடுகளும்
நிலவி வருவதால் அதை மூடவேண்டும் என்று
தீர்மானம் ஒன்றை மாநகராட்சியில்
கொண்டுவந்தார்,
சென்னை நகருக்கு
புதிய சாக்கடை திட்டம்
கொண்டு வந்தவர்.
தண்டையார் பேட்டை
கழிவுநீர் திட்டம் இவரது தூண்டுதலால்
கொண்டு வரப்பட்டது!
நகர சுகாதாரத்துறையுடன் இணைந்திருந்த துப்புரவுத்துறையை பிரித்து மேம்படுத்தியவர் இவரே!
சென்னை நகரத்தில்
40அடிக்கு
குறைவான சாலைகள் இருக்கக்கூடாது
என்று மாநகராட்சியில்
தீர்மானம் கொண்டு வந்தவர்
டி. எம். நாயர்.
அன்றய
சென்னை மாநகராட்சி தலைவராக இருந்த
வெள்ளுடை வேந்தர்
பிட்டி தியாகராயர் அவர்கள்
தெப்பக்குளத்தில்
சுத்தம் செய்வதை விட்டுவிட்டு
மூடச் சொல்வது
தவறு என்றார்.
இந்த காரணங்களுக்காக இருவரும் நீண்டநாட்கள் பேசாமலேயே
பிரிந்து இருந்தனர்!
சொந்த கருத்துக்களில் பிரிந்தவர்கள்,
பொதுக் கருத்துக்களுக்காக ஒன்றுசேர்ந்தார்கள்.
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தினை
தோற்றுவித்த தலைவர்களில்
மிக முக்கிய
பங்காற்றியவர்
டி. எம். நாயர்.
பிராமணரல்லாதார்
இயக்கத்தை
1916 நவம்பர் 20 அன்று
சி. நடேசன்,
சர்.பிட்டி. தியாகராயர்,
டி. எம். நாயர் ஆகியோர்
துவக்கி
வைத்திருக்காமல் இருந்திருந்தால் பிராமணரல்லாதார்,
வாழ்வில்
மாற்றம் வந்திருக்காது!!
நீதிக்கட்சியின்
ஏடுகளில் ஒன்றான
ஜஸ்டிஸ் பத்திரிக்கையின் ஆசிரியராக
டி. எம். நாயர்
பொறுப்பேற்றதும்
பிராமணரல்லாதாருக்கான
(பிராமணரல்லாதார் என்றால் முஸ்லிம், கிருஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட, மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள்)
இடஒதுக்கீடுகள்
கல்வி, தொழில்,
வேலைவாய்ப்பு மற்றும்
அனைத்து துறைகளிலும்
வேண்டும் என்பது பற்றி
புகழ்பெற்ற
தலையங்கங்கள் எழுதினார்.
அது இங்கிலாந்து
பாராளுமன்றத்தில்
விவாதப் பொருளாகி,
அதன் விளைவாக
மாண்டேகு-செம்ஸ்போர்டு குழு
நியமிக்கப்பட்டது.
இந்தியா வந்து
ஆய்வு செய்த குழுவில்
பிராமண உறுப்பினர்கள் இருந்ததை எதிர்த்து
நீதிக் கட்சி புறக்கணித்தது.
பிராமணரல்லாத
மக்களின்
நல்வாழ்விற்கான உரிமைகள் இடம்பெறாமல் போனதால்,
அதை விவரிக்க
இங்கிலாந்து புறப்பட்டார்.
இந்திய சீர்திருத்தங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போகும்
டி. எம். நாயரின்
பாஸ்போர்ட்டை
ரத்து செய்யவேண்டுமென்று
ஹோம்ரூல் இயக்கம்
(அன்னி பெசன்ட்) மனுகொடுத்தது.
தடைகளை மீறி
1918 ஜூன் 19ம் தேதி இங்கிலாந்தில்
‘லிவர்பூல்’ நகரில்
பாராளுமன்ற
உறுப்பினர்கள் மத்தியில்
நீதிக் கட்சியின் துவக்கம்,
அதன் கொள்கை,
அதன் குறிக்கோள்
பற்றி பேசினார்
“பிரமணரல்லாதோரின் வகுப்புரிமை நீதி” பற்றியும்,
அதன் கோரிக்கையை,
அதன் நேர்மையை
எடுத்துக்காட்டி தெள்ளத்தெளிவாக
ஒருமணி நேரத்திற்கும்
மேலாக பேசினார்.
ஆனாலும்,
பிராமணர்களின்
தலையீட்டால்
நம் கோரிக்கை நிறைவேறவில்லை.
எனவே,
பனகல் அரசர்
ராமராய நிங்கர் தலைமையில்
மீண்டும் ஒரு குழு
1919 ஜூலை 9ம் தேதி
இங்கிலாந்து சென்றது!
ஜூலை 18ம் தேதி
நமது கோரிக்கையை
வைப்பதற்கு முன்
டாக்டர் டி. எம். நாயர்
1919 ஜூலை 17ம் தேதி
லண்டன் நகர
மருத்துவமனையில்
உயிரை இழந்தார்.
பிராமணரல்லாத
திராவிட மக்களின் உரிமைகளுக்காக
இரவும், பகலும்
அயராது பாடுபட்ட
நீதிக்கட்சியின்
மகத்தான மக்கள் தலைவர்
டி. எம். நாயர் அவர்களை,
அவர்தம்
புகழை போற்றுவோம்!!
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்,
ART.நாகராஜன்,
புத்தக வாசல், மதுரை.
02.06.2020.