EN KADHAI
என்னுடைய சுயசரிதத்தை நான் எழுத வேண்டும் என்று சில நண்பர்கள் பல நாள்களாக என்னை வற்புறுத்திக் கொண்டே வந்தார்கள். நான் ‘சுய சரிதம்’ என்று எதையும் எழுத நாணப்பட்டேன். ஏனென்றால், ‘சுய சரிதம்’ என்று எழுதுவதற்கு மற்ற மக்களுக்கு வழிகாட்டிகளாக வாழ்வது, செயற்கரிய காரியங்களைச் செய்த மகான்களுக்குத்தான் தகும் என்பது என்னுடைய மனப்பழக்கம். உலகத்தின் எந்தப் பகுதியிலும் ‘சுய சரிதம்’ எழுதினவர்களில் அநேகமாக எல்லாரும் அப்படிப்பட்ட அசாதாரண மனிதர்கள்தான். மகாத்மா காந்தியடிகளின் சுயசரிதமும், ஸ்ரீ உ. வே. சாமிநாதையரவர்களுடைய சுயசரிதமும் மக்களுக்குப் பல நீதிகளைப் போதிக்கக்கூடிய செயல்கள் நிறைந்தவை. அவரவர் துறையில் அவர்கள் செய்த அரும்பெரும் முயற்சிகள் அடங்கினவை. அப்படிப்பட்ட அரிய முயற்சிகளில் எல்லாரும் ஈடுபடுவது முடியாது என்றாலும், நித்திய வாழ்க்கைக்கான ஒழுக்க வழக்க உயர்வுகளையாவது உபதேசிக்கத் தக்கவை ஆதலால், ‘சுய சரிதம்’ என்று எதையும் எழுதி, அதைப் பிறர் படிக்கச் செய்யக்கூடிய உரிமை அப்படிப்பட்ட பெரியவர் களுக்குத்தான் உண்டு என்ற எண்ணத்தால் நான் ‘சுய சரிதம்’ என்று எழுதத் தயங்கினேன். ஆனால், நண்பர்கள் என்னை விட்டபாடில்லை. என்னுடைய வாழ்க்கையில் நடந்து என் நினைவில் இருக்கிற எல்லா நிகழ்ச்சிகளையும் எழுதவில்லை. அதனால் வரிசைக்கிரமம் முன்னும் பின்னுமாகவும் இருக்கும். படிப்பவர்களுக்கு இது எத்துணை இன்பமளிக்குமோ எனக்குத் தெரியாது.
– வெ. இராமலிங்கன்
Reviews
There are no reviews yet.