இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 அயோத்திதாசரின் சமூகச் சிந்தனைகளும் செயல்களும்
அயோத்திதாசரின் சமூகச் சிந்தனைகளும் செயல்களும்						 அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்						 வியத்தலும் இலமே
வியத்தலும் இலமே						 புனைவும் நினைவும்
புனைவும் நினைவும்						 தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)						 அறிவுத் தேடல்
அறிவுத் தேடல்						 இயக்கம்
இயக்கம்						 தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை						 ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்
ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்						 கிராமத்து தெருக்களின் வழியே
கிராமத்து தெருக்களின் வழியே						 வியட்நாம் புரட்சி வரலாறு
வியட்நாம் புரட்சி வரலாறு						 எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!						 ஏன் இந்த மத மாற்றம்?
ஏன் இந்த மத மாற்றம்?						 சோழர் காலச் செப்பேடுகள்
சோழர் காலச் செப்பேடுகள்						 பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)						 Behind The Closed Doors of Medical Laboratories
Behind The Closed Doors of Medical Laboratories						 சங்க இலக்கியச் சோலை
சங்க இலக்கியச் சோலை						 அணங்கு
அணங்கு						 திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்						 இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்						 திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்						 தலை சிறந்த விஞ்ஞானிகள்
தலை சிறந்த விஞ்ஞானிகள்						 வானில் விழுந்த கோடுகள்
வானில் விழுந்த கோடுகள்						 கிருஷ்ண காவியம்
கிருஷ்ண காவியம்						 சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்						 கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்						 தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்						 ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்						 அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)						 கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)						 புகழ் மணச்  செம்மல் எம்.ஜி.ஆர்
புகழ் மணச்  செம்மல் எம்.ஜி.ஆர்						 நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து						 சமனற்ற நீதி
சமனற்ற நீதி						 அரைக்கணத்தின் புத்தகம்
அரைக்கணத்தின் புத்தகம்						 தமிழர் பண்பாடும் – தத்துவமும்
தமிழர் பண்பாடும் – தத்துவமும்						 அந்தரங்கம்
அந்தரங்கம்						 தோட்டியின் மகன்
தோட்டியின் மகன்						


Reviews
There are no reviews yet.