இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

வகுப்புவாரி உரிமையின் வரலாறும் பின்னணியும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -7)
தமிழால் தலை நிமிர்வோம்
யாக்கையின் நீலம்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பிறகு
ஒரு பொத்தல் குடையும் சில போதிமரங்களும்
மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்
கௌடில்யரின் சாணக்கிய நீதி என்றும் சமூக, அரசியல் நெறிமுறைகள் (அர்த்த சாஸ்த்திரம்)
தாய்ப்பால்
தமிழா நீ ஓர் இந்துவா?
வாழ்க்கைத் துணைநலம்
எரியாத நினைவுகள்
சோழர் கால விஸ்வரூபச் சிற்பங்கள்
நமது குறிக்கோள் தொகுதி - 2
பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்
ராணியின் கனவு
குலசேகர ஆழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு
தமிழ்ப் புலவர் வரலாறு
கைம்மண் அளவு
அன்பின் தருவுருவம் அன்னை தெரசா
வணக்கம் துயரமே
தல Sixers Story
சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள்
லடாக்கிலிருந்து கவிழும் நிழல்
பிடி சாம்பல்
மூவர்
தம்பிக்கு
அறம்
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
ராஜன் மகள்
தொண்டா துவேஷமா?
தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அவள் ராஜா மகள்
துயரமும் துயர நிமித்தமும்
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
ரவிக்கைச் சுகந்தம்
திரையும் வாழ்வும்
கற்பனைச் சிறகுகள்
எம்.ஜீ.ஆர்
பாரதியார் கவிதைகள்
கண்ணிலே இருப்பதென்ன!
நேர நெறிமுறை நிலையம்
மற்றாங்கே
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -3)
கடவுளின் கதை (பாகம் - 3) முதலாளி யுகத்தை நோக்கி
புதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3
கதவு திறந்தததும் கடல்
மகாபாரதம்
பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி - 100
நீல பத்மநாபனின் 168 கதைகள்
உலக இலக்கியங்கள்
எஞ்சும் சொற்கள்
உள்பரிமாணங்கள்
மறைக்கும் மாயநந்தி
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
தாம்பூலம் முதல் திருமணம் வரை
மும்மூர்த்திகள்: ஜெயமோகன் – யுவன் சந்திரசேகர் – பெருமாள்முருகன்
என்னைச் சந்திக்க கனவில் வராதே
மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர்
குற்றமும் அரசியலும் (எதிர்க்குரல் -3)
மனிதனும் தெய்வமாகலாம்
கடலுக்கு அப்பால்
பெரியாரியம் - சமுதாயம் (உரைக்கோவை-1)
மனிதனுக்கு ஒரு முன்னுரை
இணைந்த மனம்
ஏழாம் வானத்து மழை
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
யாசகம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
அபாய வீரன்
இளைஞர்களே... திராவிடம் பேசுவோம்
யூதாஸின் நற்செய்தி
போர் இல்லாத இருபது நாட்கள்
பண்டிதர் 175
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது
மன்னித்துவிடு இன்பா!
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
பொங்கி வரும் புது வெள்ளம்
வால்மீகி இராமாயண சம்பாஷணைகள்
நயத்தகு நாகரிகம்
தமிழகத்தில் ஆசீவகர்கள்
மனுதர்ம சாஸ்திரம்
உருத்திரமதேவி
தமிழரின் பரிணாமம்
கள்ளிக்காட்டு இதிகாசம்
மேல் கோட்டு
யதி
உலகைப் புரட்டும் நெம்புகோல்
மார்க்சிய - லெனினிய தத்துவம்
சவராயலு நாயகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இன்னொருவனின் கனவு
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்
அன்பிற் சிறந்த தவமில்லை 


Reviews
There are no reviews yet.