என் பெயர் கமலா

Publisher:
Author:

75.00

என் பெயர் கமலா

75.00

“என் பெயர் கமலா” என்ற இவ்வரலாறு தினமணி கதிரில் தொடர்ச்சியாக புஷ்பா தங்கதுரை
அவர்களால் எழுதப்பட்டது.

மனித சமுதாயத்தின் கேவலமான தசைப் பசிக்காகப் பலியாகிய ஓர் இளம் அபலைப் பெண்ணின் சோக வரலாறு இந்நூல். நாவலோ, கதையோ அல்ல இது, உண்மைச் சம்பவம்.

எந்தப் பழிபாவத்திற்கும் அஞ்சாத விபசார விடுதி நடத்துபவர்கள், புதிதாகப் பெண்களைக் கடத்திக் கொண்டுவந்து, அவர்களைக் கொடுமையாக அடித்து நொறுக்கி விபசாரத்துக்கு உட்படுத்துவதாகக் கமலா சொல்வது, இந்த நாகரீக உலகத்திலும் நடக்கிறதா என்ற ஐயப்பாட்டைத்தான் நமக்கு எழுப்பும்.

இறுதியில், கமலா ஆண் வர்க்கத்தையே சாடுகிறாள்; சபிக்கிறாள்; கோழைகள் என்று வசைமாரி பொழிகிறாள்.

இவ் வரலாற்றின் இடையிலே ஆண்வர்க்கத்தின் காம வேட்கை காரணமாகத் தங்கள் உயிரையே விட்ட பல அபலைப் பெண்களைச் சந்திக்கிறோம்.

இவ்வரலாற்றுப் புதினத்தைப் பற்றி தினமணி கதிரில் வாசகர்களிடையே பெரிய சர்ச்சையையே கிளம்பிவிட்டது. வெகுபலர் கமலாவின் துயரக் கதை படித்து உள்ளம் கசிந்தார்கள். மிகச் சிலரே  “இது காம இச்சையைத் தூண்டும் நூல்; ஒளிவு மறைவு இன்றிக் கமலா இப்படியெல்லாம் கூறலாமா” என்று ஆஷாடா பூதித்தனமாய் ஒப்பாரி வைத்தனர். எனினும் பல்லாயிரக் கணக்கான வாசகர்களின் அனுதாப உணர்ச்சியைக் கமலா பெற்றிருக்கிறாள்.

Delivery: Items will be delivered within 2-7 days