உயிர் வளர்க்கும் திருமந்திரம்:
இந்த உலகில் பிறந்த உயிர்க்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்வின் ஒரு தருணத்திலாவது சில கேள்விகள் எழும். தான் யார்? தனது இருப்பின் பொருள் என்ன? இந்த உலகில் தன் இடம் என்ன? தான்படும் அல்லல்களின் மூலம் என்ன? அதன் தளைகளை அறுத்து விடுதலை பெறுவதற்கான வழி என்ன? போன்ற கேள்விகள் தான் அவை. இருப்பின், ஆதாரங்களான உடல், மனம் சார்ந்த பல்வேறு புதிர்களைத் திறந்து மெய்நெறியை வழங்குவது திருமூலர் எழுதிய திருமந்திரம் ஆகும். சமயப் படைப்பு என்ற வரையறையைத் தகர்த்து தனித்துவமான மெய்யியல் நூலாகத் திகழும் திருமந்திரத்தைத் தழுவி, இக்காலத்தவருக்கும் இக்காலம் நம் முன்னர் விடுக்கும் கேள்விகளுக்கும் பதிலாகவும் தீர்வுகளாகவும் இந்நூல் அமையும்.

தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1 
Reviews
There are no reviews yet.