இதுவே சனநாயகம்!
சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் எனப் புறத்தே புலனாகும் சாதாரண நிகழ்வுகள்தாம் அவருடைய அகழ்வாய்வுக் களங்கள்.பட்டறிவை முதன்மையாகவும் படிப்பறிவைத் துணையாகவும் கொள்வது அவரது முறையியல். இம்முறையில் அவர் சாதாரண நிகழ்வுகளை அகழ்ந்து
காட்டும்போது புலப்படும் உண்மைகள் நமக்கு அசாதாரணமாகத் தோன்றிவியக்க வைக்கின்றன.

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
2800 + Physics Quiz
21 ம் விளிம்பு
Compact DICTIONARY Spl Edition
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6 
அமீபா. –
அடித்தள மக்களின், வாழ்வும் பண்பாடும், வழிபாட்டு முறைகளும், எத்தகைய சனநாயகத் தன்மை கொண்டதாக விளங்கியது என்பதை விளக்குகிறது இந்நூல்.
அம்மணம், மயிராண்டி ,மயிரைப் பிடுங்கு, மூணு கண்ணு பூச்சாண்டி போன்ற வசைச் சொற்கள் மூலமாக, பக்தி இயக்கம் தமிழரிடையே உருவாக்கிய சமண வெறுப்பை விளக்குகிறார்.
நிறுவன மயமான “சமய”த்தின் முன்னரே, தாய் தெய்வ வழிபாட்டில் இருந்த சனநாயக தன்மையையும், “மத சகிப்புத்தன்மை என்பதே கெட்ட வார்த்தை” என்பதை தனது களஆய்வின் மூலமாக தெளிவாக எடுத்துரைக்கிறார் பண்பாட்டு ஆய்வாளர் அறிஞர் தொ. பரமசிவன்.
கிறிஸ்தவ கத்தோலிக்கம் காலூன்றியதை, விளக்கு (குருசடி விளக்கு) , தாய் தெய்வ வழிபாடு ( மாதா)போன்ற திராவிட பண்பாட்டுக் கூறுகளின் வழியாக விளக்குகிறார்.
“சுத்தம்” என்ற வைதீக கோட்பாட்டினை கண்ணன் என்ற குழந்தையை முன்னிறுத்தி, தகர்த்தெறிய முற்பட்ட வைணவ மரபை ஆய்கிறார்.
பேரன் பேத்தி, தம்பி போன்ற உறவு முறை சொல்லுக்குள்ளான ஆய்வும், கைம்பெண் பற்றியும், “ஒப்பாரி” ஒரு துயரக் கவிதையான, இலக்கிய வடிவம் எனும் பார்வையும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
சில அறிஞர்களின் அறிமுகத்தையும், திருக்குறள், குடும்ப விளக்கு, நிகண்டு நூல்கள், சீறாப்புராணம் போன்ற பல புத்தகங்களைப் பற்றிய புரிதலையும் நமக்கு உருவாக்குகிறது.
எல்லாம் கலந்த கலவையான, காலச்சுவடு வெளியீடான, இப்புத்தகம் ஒரு “காக்டெய்ல்”.
கண்களின் வழியே பருகினால், நமக்கு அறிவு போதை ஏறுவது நிச்சயம்.
– அமீபா.