Ilaiyorukku Etram Tharum Iniya Kadhaikal
எந்த சொற்பொழிவிலும் உறையாற்றுபவரின் சொற்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டுமானால், ஏதேனும் உபமானம், உபமேயத்தோடு அவர் பேசவேண்டும். தான் சொல்ல வந்த கருத்து கேட்போரைச் சென்று அடைய சிறுகதைகள் உதவும் என்பது பல சொற்பொழிவாளர்களின் அனுபவமாக இருக்கிறது. கேட்கும் உரை என்றில்லாமல், படிக்கும் வாசகங்களும் வாசகரை ஈர்க்க வேண்டுமானால், ஆங்காங்கே சில நயங்களையும், சொல் விளையாட்டுகளையும், இயல்பான வர்ணனைகளையும், குட்டிக் கதைகளையும் பொருத்துவதுதான் உசிதமாக இருக்கும்.
அந்நாளைய பஞ்ச தந்திரக் கதைகளிலிருந்து இப்போதைய தன்னம்பிக்கையைத் தூண்டும் கட்டுரைகள்வரை இந்த உத்தி கையாளப்படுகிறது. எதைச் சொன்னால் கேட்பார்கள் என்பதைவிட எப்படிச் சொன்னால் கேட்பார்கள் என்ற நுணுக்கம் இப்போது பரவலாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. குழந்தைக்கு உணவு ஊட்டும்போதும், அதனைத் தூங்கச் செய்யும்போதும், ஒரு தாய் கதை சொல்வதும் இதனால்தான். அந்தக் குழந்தை உணவு உண்ண வேண்டும், தூங்க வேண்டும் என்பதுதான் அந்தத் தாயின் எதிர்பார்ப்பு. அதை நிறைவேற்ற அந்தக் குழந்தைக்குப் பிடித்தமான, அது உணவோடு சுவைக்கக்கூடிய கதைகளை அவள் சொல்கிறாள்; தன் நோக்கம் நிறைவேறப்பெறுகிறாள்.
தினகரன் ஆன்மிக மலரில் வாராவாரம் தொடர்ந்து வெளிவந்த கதைகளின் சற்றே மாற்றப்பட்ட வடிவம்தான் இந்த நூல். தன்னம்பிக்கையைத் தூண்டும் பல கதைகள் உங்கள் சிந்தனைக்கு விருந்தாகி, செயல்களை ஆக்கபூர்வமாக மேன்மையாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
.
Reviews
There are no reviews yet.