Kadavulal Entha Nanmaiyum Illai
முதல் மனித உரிமைப் போராளி என்பவர் புத்தர் தான். புத்தர் கலாமர்களின் ஊருக்குச் சென்றபோது, அவர்கள் புத்தரைக் கேட்டார்கள். “எல்லோரும் வந்து எங்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். நாங்கள் எந்த வழியில் செல்ல வேண்டும்? குழப்பமாக இருக்கிறது. எந்தப் பாதை சரியான பாதை.” புத்தர் அவர்களுக்கு அறிவுரை வழங்கவில்லை. “நான் யார் உங்களுக்கு அறிவுரை வழங்க? நீங்களே சிந்தித்து முடிவெடுங்கள். நீங்கள் அனுபவித்துப் பாருங்கள். நீங்கள் மதிப்பிடுங்கள். நீங்கள் சோதனை செய்யுங்கள். நீங்கள் விமர்சியுங்கள். நீங்கள் அதைப் பரிசோதித்துப் பாருங்கள். அது நல்லதாக இருந்தால், அதைக் கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், அதைப் புறக்கணியுங்கள்,” என்றார். இதுதான், இன்றளவும் உலகிலேயே முதல் மனித உரிமைக் கோட்பாடு.
Reviews
There are no reviews yet.