1 review for கனவுகளின் நடனம்
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹190.00.₹180.00Current price is: ₹180.00.
கனவுகளின் நடனம்:
எழுத்தாளர்களின் வருகை சினிமாவை இன்னும் செம்மைபடுத்தும் என்பார் இயக்குநர் பாலு மகேந்திரா. சினிமாவில் இருந்துகொண்டு அதனை தன்னுடைய ஊடகமாக மாற்றிக்கொள்ள எத்தனித்தவர் ஜெயகாந்தன். ஆனால் சினிமா அவரை மாற்ற முயற்சித்தபோது அதிலிருந்து வெளியேறினார். இவர்கள் ஒரு வகை என்றால் சினிமாவைப் பற்றி விமர்சிப்பதும், தொடர்ந்து சினிமா பற்றி எழுதுவதும் அதனை செம்மைப்படுத்தும் இன்னொரு வழிமுறை.
சாரு நிவேதிதா இரண்டாவது வழிமுறையைத் தேர்ந்தெடுத்து அதனை செவ்வனே செய்துகொண்டிருக்கிறார். வெங்கட் சாமிநாதனுக்கு அடுத்து தமிழ் சினிமாவை இந்த அளவிற்கு காத்திரமாக விமர்சித்த எழுத்தாளர் அவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். எத்துணை ஆயிரம் பேர் எதிர்த்தாலும், தன்னுடைய சினிமா விமர்சன போக்கில் இருந்து அவர் ஒருபோதும் பின்வாங்கியதில்லை. தமிழில் வெளியான பல முக்கியமான படங்கள் குறித்தும், மற்ற இந்திய படங்கள் குறித்தும் இந்நூலில் விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார் சாரு நிவேதிதா. தமிழ் சினிமாவை விமர்சன ரீதியாக அணுகியிருக்கும் மிக முக்கியமான புத்தகம்.
Delivery: Items will be delivered within 2-7 days
Bhojan –
இந்த புத்தகம் 2010 கால கட்டத்தில் எழுதப்பட்டதனால். அப்போது
ஓடி கொண்டு இருந்த சினிமா மட்டும் விமர்சனம் செய்கிறது குறிப்பாக ராவணன், எந்திரன், அங்காடி தெரு, விண்ணை தாண்டி வருவாயா, love sex doka, my name is khan, peepli live, inception போன்ற படங்கள் குறிப்பாக அவற்றில் உள்ள சாதக பாதகங்கள் அது மட்டும் இல்லாமல் இளையராஜா பற்றிய விமர்சனம், yanni, kim ki duk என மொத்தம் 25 தலைப்புகளில் கட்டுரை இருக்கின்றன.
உண்மையில் இந்த கட்டுரைகளை 2010 காலத்தில் படித்து இருந்தால் இவற்றை ஏற்று கொண்டு இருப்போமா என்ற சந்தேகம் வருகிறது காரணம் நாம் எதை எல்லாம் சிறந்த படம் என்று சொல்கிறோமோ அத்தனை படத்தையும் விமர்சித்து தள்ளி இருக்கிறார் குறிப்பாக இராவணன், அங்காடி தெரு இப்போது இந்த புத்தகம் படிக்கும் போது சில கருத்துக்கள் அவரிடம் இருந்து மாறு பட்டாலும். இது படிக்க வேண்டிய புத்தகம் தான்.