Ki.Rajanarayanan Kathaikal
நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன்; ஒதுங்கியவன் பள்ளிக் கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக்கொண்டிருந்து விட்டேன்.
♦
எனது ஊரையும் என் மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின்மேல்தான். நான் தவழ்ந்து விளையாடி மகிழ்ந்ததும், விழுந்து அழுத்தும் இந்த மண்ணின் மடியில்தான். இந்தப் புழுதியை நான் தலையில் வாரி, வாரிப் போட்டுக் கொண்டும், என் கூட்டாளிகளின் தலையில் வாரி இறைத்தும் ஆனந்தப்பட்டிருக்கிறேன். இந்த கரிசல் மண்ணை நான் ருசித்துத் தின்றதற்கு என் பெற்றோரிடம் எத்தனையோ முறை அடிவாங்கியிருக்கிறேன். இன்றைக்கும் எனக்குத் தெவிட்டவில்லை இந்த மண்!
Reviews
There are no reviews yet.