KITCHEN TO CLINIC
புதிது புதிதாகப் பல நோய்கள் வருகின்றன எனக் கவலைப்படும் நாம், நிறைய நோய்களுக்கு நம் உணவே காரணம் என்ற உண்மையை ஏற்க மறுக்கிறோம். நம் உணவின் சாரம்தான் நாம். ஒரு தலை முறைக்கு முன்பு கடைவீதியில் பார்த்தால், விதைகளைக் கோணியில் பரப்பி விற்பனைக்கு வைத்திருப்பார்கள். அவரை, வெண்டை, பூசணி, கத்தரி என இந்த விதைகளை வாங்கித் தோட்டத்தில் நட்டு நம் சமையலுக்குப் பயன்படுத்தி வந்தோம். கனிந்து சிவந்த தக்காளி ஒன்றைத் தோட்டத்து மண்ணில் பிழிந்துவிட்டால், செடிகளாய் முளைத்துக் காய்க்கும். கொத்தமல்லி விதைகளைத் தூவிவிட்டால், மல்லித்தழை வளர்ந்து நிற்கும்.
பையைத் தூக்கிக்கொண்டு காய்கறி மார்க்கெட்டுக்கு போனவர்கள் குறைவு. அன்று விதைகள் விற்ற கடைகளில் இன்று காய்கள் மட்டுமே விற்கிறார்கள். நம் தோட்டத்தைத் துறந்துவிட்டு, எந்த மண்ணிலோ, எந்தத் தண்ணீரிலோ, என்னென்னவோ மருந்துகள் கொட்டி விளைவித்த காய்களையும் கனிகளையும் வாங்கிச் சாப்பிடுகிறோம். அதையாவது சரியாகச் செய்யலாமே என்ற ஆதங்கத்தின் விளைவுதான் இந்த நூல். ‘குங்குமம்’ இதழில் இது தொடராக வெளிவந்தபோது, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்றது. ‘எதெல்லாம் கெட்டது’ என்பதை மட்டுமே சொல்லி பயமுறுத்தாமல், ‘எப்படி நல்லவற்றைத் தேடலாம்’ என்று சொல்லும் ஆரோக்கிய வழிகாட்டியாகவும் இருப்பது இந்த நூலின் சிறப்பு.
இனி உங்கள் சமையலறை உங்கள் இல்லத்தில் அனைவருக்கும் ஆரோக்கியத்தைத் தரட்டும்!

நான் நாகேஷ்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
Dravidian Maya - Volume 1
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
One Hundred Sangam - Love Poems
வலசைப் பறவை
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள் 
Reviews
There are no reviews yet.