கொமுரம் பீம்
Publisher: சிந்தன் புக்ஸ் Author: அல்லம் ராஜய்யா, சாஹூ₹350.00
Delivery: Items will be delivered within 2-7 days
Category: அனைத்தும் / General
Tags: Chinthan Books, Tamil Books, தமிழ் புத்தகங்கள்
Description
‘கொமுரம் பீம்’ புதினம்
நீண்ட காலத்திற்கு பிறகுதான் கொமுரம் பீம் தமிழுக்கு வருகிறார். தாமதமாகவேயானாலும் கொமுரம் பீமுவை பெருமையுடன் உங்கள் முன் நிறுத்துகிறோம். கொமுரம் பீம் நடத்திய வீரமிக்கப் போராட்டத்தை தெலுகுவில் கலை நயத்துடன் புதினமாக வடிவமைத்து வழங்கிய ஆசிரியர்கள் சாஹு / அல்லம் ராஜய்யா குறைந்தது ஏழாண்டுகள் தண்டகாரண்யத்திலும், தொடர்புடைய இடங்களிலும் உழைத்தார்கள்.
கொமுரம் பீமுவை அவர்கள் எங்கிருந்து தோண்டி எடுத்தார்கள்? உண்மையில் கொமுரம் பீம் போன்ற மக்கள் போராளிளை யார் எங்கிருந்து எவ்வாறு தோண்டி எடுப்பார்கள்? போராளிகள் பழைய ஆவண காகிதக் கட்டுகளில் இருப்பார்கள் என்றும், அங்கிருந்துதான் தோண்டி எடுக்க வேண்டும் என்றும் கல்விசார் வரலாற்றாளர்கள் நினைத்திருக்கலாம்; ஆனால் மக்கள் போராளிகளைப் பொறுத்தவரை, அவர்கள் எழுத்து ஆவணங்களில் மட்டுமே இருப்பவர்கள் அல்ல. கொமுரம் பீம் எழுத்துக்களில் மட்டுமே நிலைத்த பெயராக இருக்கவில்லை, கோண்டு மக்களும் அவரை அவ்வாறு பார்க்கவில்லை.
கொமுரம் பீம் கோண்டு மக்களின் ரத்த ஓட்டமாக சுழற்சியில் இருக்கிறான். ரத்த ஓட்ட சங்கீத சுருதியை ஒலித்துக் கொண்டிருக்கிறான். அவன் கோண்டு மக்களின் கண்ணின் மணியாக அவர்கள் பார்வையை மேலும் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறான். கைகளாக இருந்து ரகல் கொடியை உயர்த்திக் கொண்டிருக்கிறான். பிறை சின்னத்தை அரிவாள் சுத்தியலாக பரிணமிக்கச் செய்து உயிர்ப்புடனான விழிப்புணர்வின் பகுதியாய் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். அவர்களின் கால்களாக இருந்து பாபெஜுரி – ஜோடேகாட் பாதையில் அரசதிகாரத்திற்கான நீண்டப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறான். அவனும் அதில் நடந்துக் கொண்டிருக்கிறான்.
குர்துப்பட்டேல் துரோகத்திற்கு பழிவாங்கிய தெலங்கானா ஆயுதப்படையின் கோபால்ராவ் தளத்தின் (ஸ்குவாட்) விழிப்புணர்வாய், போராட்ட பாரம்பரியத்தைக் கைக் கொண்ட மக்கள் போர் பல்லவியாய், இந்திரவெள்ளியின் ரத்தம் தோய்ந்த பாடலாய் கொமுரம் பீம் சுடர்விட்டெரிந்துக் கொண்டிருக்கிறான். அதனால்தான் கோண்டுகள் கொமுரம் பீமுவை இன்று புதிதாக நினைவுக் கொள்ள வேண்டியதில்லை.
கல்விசார் வரலாற்றாளர்கள் மட்டும் ஆவணக் காகிதக் கட்டுகளின் பொய்களை, திசைதிருப்புதல்களை அளவுகோலாகக் கொண்டு, ஆறெழுத்து பெயரை வெறும் பெயராக மட்டுமே உயிரற்று புரிந்து கொண்டு, கோண்டு மக்களுக்கு தாம்தான் கொமுரம் பீமுவை அறிமுகப் படுத்தினோம் என்று கூறி பெருமைக் கொள்ளவும் துணிவார்கள்.
மறந்தால்தான் நினைவுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கும். ஆனால்… எந்த ரத்தம் வடிந்த நிலத்தை விடுவிக்க போர் செய்கிறோமோ, அந்த போராளிகளின் ரத்தம் நமது ரத்த நாளங்களில் சுழல்கையில் அவர்களை மறந்துவிடுவதற்கு வாய்ப்பே இல்லை… நினைவுக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை.
அதனால்தான் இந்த நூல் ஆக்கம் பீமுவை கோண்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக அல்ல. பொய்யான திசைதிருப்புதல் வரலாறுகளை மட்டுமே வாசித்தவர்களுக்கு உண்மையான மக்கள் போராளிகளை, நமது மரபான வீரர்களை அறிமுகம் செய்வதற்கும், நிலப்போராட்டம் இறுதியாக அரசதிகாரத்திற்கான போராட்டமாக எவ்வாறு வளர்ச்சியடையும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே.
இந்த பணியை திறமையாக நிறைவேற்றி, மக்கள் போராட்ட இலக்கியத்திற்கு ஒரு சிறந்த புதினத்தை வழங்கிய தோழர்கள் சாஹு / அல்லம் ராஜய்யா அவர்களுக்கும், இரண்டு முன்னுரைகளை எழுதிய தோழர் வரவரராவ் அவர்களுக்கும் நன்றி.
Reviews (0)
Be the first to review “கொமுரம் பீம்” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5
Sale!
அனைத்தும் / General
Reviews
There are no reviews yet.