கொரியாவின் தமிழ் ராணி
கொரியா எனும் தூர கிழக்கு நாடு பற்றிய தமிழகச் சிந்தனை என்பது மிக சமீபத்தியது. கொரியாவின் ஹுயுந்தே கார்கள் நம் வீதிகளில் வலம் வந்த பின், எல்லோர் கைகளிலும் ஒரு சாம்சுங் விவேகத் தொலைபேசி பேசத்தொடங்கிய பின், கேபாப் இசை இளைஞர்களிடம் பரவிய பின், கங்நாம் ஸ்டைல் பாட்டு உலகை உலுக்கிய பின், கொரியாவின் சோப் ஆபரா எனும் திரை ஓவியங்கள் மக்கள் மனதைப் பிடிக்கத் தொடங்கியவுடன் தமிழனின் பார்வை கொரியாவை நோக்கித் திரும்பி இருக்கிறது. ஆனால் கொரியர்களின் நிலைப்பாடு வேறு. கொரியாவின் பைபிள் என்றழைக்கப்படும் சம் குக்உசா எனும் நூல் மிக ஆதியிலேயே கொரியாவிற்கும் இந்தியாவிற்கும் தொடர்பு இருந்தது என்று சொல்கிறது. குறிப்பாக கொரியாவின் ஆதி குடிகளும், அதிகாரயண பலம் பொருந்திய கிம் இனம் தன் தாய் வழி உறவு இந்தியா என்று இன்றும் நம்புகிறது. இவர்களின் சமகாலத் தேடலே கொரியாவை இந்தியாவுடன் நெருக்கி இருக்கிறது எனில் அது மிகையல்ல. இது பற்றிய கதையாடலை முதலில் தொடங்கிய ஹன்யாங் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிம் பியோங்மோ அவர்கள் உளவியல் சொல்லான “இரத்த பந்தம்”என்பதை உபயோகிக்கிறார். அதாவது அவர்கள் நமக்கு உறவு என்பது பொருள். ஆனால் இது பற்றிய சிந்தனை தமிழகத்தில் இதுவரை வந்ததே இல்லை !
Reviews
There are no reviews yet.