உலகமே ஏக்கத்தோடு இந்தியாவைத் திரும்பிப் பார்க்கக் காரணம், இங்குள்ள ஆன்மிகமே. ‘‘எல்லா வசதியும் என்னிடம் இருக்கிறது. ஆனால் நிம்மதி இல்லை’’ என தவிக்கும் ஒவ்வொருவரின் கடைசிப் புகலிடமும் ஆன்மிக பவர் சென்டர்களாக இருக்கும் கோயில்கள்தான். கோயில்களின் அமைப்பில் குழைத்து வைக்கப்பட்ட ஆன்மிக அறிவியல், அந்த இடத்துக்கு வருபவரை மட்டுமல்ல… அந்த இடத்தைக் கடந்து செல்லும் மனிதனின் மனதில் கூட மலர்ச்சியை ஏற்படுத்தி விடும் என்பது சத்தியம். இதை ஓஷோ திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தி இருக்கிறார். ஒவ்வொரு ஆலயமும் தரும் பலன்கள்தான் எத்தனை… திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள அட்சர பீடத்தில் 51 அட்சரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பீடத்தை தரிசித்தால் கல்வியில் முதன்மை பெறலாம்.
* கும்பகோணம் அருகேயுள்ள திருவெள்ளியங்குடி தலத்தில் எரியும் நேத்ர தீபத்தில் எண்ணெய் ஊற்றி வேண்டினால், கண் நோய்கள் நீங்கும்.
* கன்னியாகுமரி பகவதி கோயிலில் கன்யா பூஜை செய்தால் மழலை வரம் கிடைக்கும்.
* திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் ஸ்ரீசக்ரமேருவுடன் அருளும் மூகாம்பிகை சந்நதியில் வணங்கினால் மனநோய் மறையும்.
இப்படி நிறைந்த கோயில்கள் பற்றிய அரிய தகவல்களை வாரந்தோறும் பிரசாத கற்கண்டாய் சுவைக்கத் தந்தது, ‘தினகரன்’ ஆன்மிக மலரின் ‘ட்வென்ட்டி 20’ பகுதி. இது போகிற போக்கில் ஆலயத் தகவல்களைத் தூவிச் சென்று, ஆலயம் பற்றிய தேடுதலை அதிகமாக்கியது. திசை எட்டிலும் திரட்டப்பட்ட தகவல்கள் பிறகு புத்தகமாக வடிவம் பெற்றது. வாசகர்களுக்கு இந்த புத்தகம் கற்கண்டாக இனிக்கும்..

வருங்கால தமிழகம் யாருக்கு?
Excellent Easy English Grammar
Indian Heritages: Vol 1
Carry on, but remember!
காதல்
Book of Quotations
On The Origin Of Species
HINDU NATIONALISM 


Reviews
There are no reviews yet.