ஐவேளைத் தொழுகை அரபுதேசத்துப் பணம் பிரியாணி போன்ற உணவுக்கலாச்சாரம் என பொதுப்புத்தியில் உறைந்து கிடக்கின்ற இஸ்லாமியர் குறித்த கருத்தாக்கத்தை கீரனூர் ஜாகிர்ராஜாவின் மீன்காரத் தெரு நாவல் கலைத்துப் போடுகிறது. இதில் வரும் மனிதர்களும் இஸ்லாமியர்கள்தான். ஆனால் நிறத்தால், மொழியால், தொழிலால், வறுமையால், காமத்தால், வன்மத்தால் உந்தித் தள்ளப்படும் இவர்களை ஏற்கனவே தமிழில் வெளியாகியுள்ள எந்த படைப்பாக்கங்களிலும் இத்தனை வீச்சத்துடனும் தீவிரத்துடனும் வாசகர்கள் சந்தித்திருக்க இயலாது.
Sale!
மீன்காரத் தெரு
Publisher: எழுத்து பிரசுரம் Author: கீரனூர் ஜாகிர்ராஜாOriginal price was: ₹140.00.₹130.00Current price is: ₹130.00.
மீன்காரத் தெரு புனைவல்ல. இஸ்லாமிய விளிம்பு நிலைப் பிரஜைகளின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை. எங்கோ ஒரு மூலையில் நடப்பதல்ல இது. சமூகத்தில் எங்கும் புரையோடிப் போயிருப்பதுதான். காலகாலமாக மறைத்து வைக்கப்பட்ட ஒரு பிரதேசத்தின் மேல், எழுத்தின் மூலமாக வெளிச்சம் பரப்பக் கிடைத்த வாய்ப்பிற்காக எப்போதும் நான் மகிழ்ச்சி கொள்ளவே வேண்டும்.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.