அபிமன்யூவாக தமிழ் நாடக உலகில் அறிமுகமானாலும் இலட்சிய நடிகராக நிலைத்து நிற்கும் எஸ்.எஸ்.ஆரின் சுயசரிதம் இந்நூல். எஸ்.எஸ்.ஆர் அவர்கள் ‘நடந்து வந்த பாதை’ என்று தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களை தன் வாழ்க்கையை இளம் பிராயத்தில் இருந்துத் துவங்கி சொல்லிக்கொண்டு வருகிறார். தான் பிறந்த ஊர், படித்த பள்ளி, நாடக ஆர்வத்தை தூண்டிய ஆசிரியர்கள், நாடகம் பயின்ற டி.கே.எஸ். அண்ணாச்சிகளின் மதுரை பாய்ஸ் கம்பெனி, அவரின் அரசியல் வாழ்க்கை வரை படிப்பவர் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். உலகிலேயே தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினரான முதல் நடிகர். இவ்வகையில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், தமிழக முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆந்திர முன்னால் முதலமைச்சர் என்.டி.ராமாராவ் ஆகியோருக்கு எஸ்.எஸ்.ஆரே முன்னோடி. தி.மு.க, அ.தி.மு.க, பார்வர்ட் பிளாக் போன்ற அரசியல் கட்சிகளின் பொறுப்பில் இருந்தாதலும் தனக்கென தனித்தன்மை பாதிக்கப்படும்போதெல்லாம் அரசியலை விட்டு விலகியே நின்றார். தன் கொள்கைக்கு ஒத்துவராத புகழ் வெளிச்சத்தில் இருக்க அவர் என்றுமே விரும்பியதில்லை என்பதை இந்த நூலில் உள்ள பல அத்தியாயங்கள் சொல்கின்றன.
Sale!
நான் வந்த பாதை
Publisher: அகநி வெளியீடு Author: எஸ்.எஸ். ராஜேந்திரன்Original price was: ₹500.00.₹470.00Current price is: ₹470.00.
உலகிலேயே தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினரான முதல் நடிகர்.
எஸ்.எஸ்.ஆர் அவர்கள் ‘நடந்து வந்த பாதை’ என்று தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களை தன் வாழ்க்கையை இளம் பிராயத்தில் இருந்துத் துவங்கிச் சொல்லிக் கொண்டு வருகிறார். கடந்த பத்தாண்டுக் காலமாக அவர் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதியவையே இந்நூல். எஸ்.எஸ்.ஆர். தன்னுடைய வரலாற்றை முழுமையாக எழுதியிருக்கிறார்.
அரசியல், கலை உலக வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்களைப் பற்றியும் எஸ்.எஸ்.ஆர். எழுதியிருக்கிறார். அவரின் முழுமையான ஆளுமை இதில் பளிங்கு போல் பிரதிபலிக்கவே செய்கிறது.
குழுந்தையைப் போன்ற பளீர் சிரிப்பு, எல்லோருக்கும் உதவும் உள்ளம், தன் வீடிற்கு வரும் எல்லோரும் சாப்பிட்ட பிறகே செல்ல வேண்டும் என்ற அன்பான உபசரிப்பு, பசும்பொன் தேவரின் மேல் காடும் பணிவான மரியாதையும் அன்பும், அண்ணாவின் மேல் இந்த கணம் வரை இருக்கும் தீராத பேரன்பு, நடிகர்களுக்கே உரிய உணர்ச்சிக் கொந்தளிக்கும் குணம், தன்னுடன் பழகும் எல்லோரையும் அன்பால் அரவணைக்கும் உயர்ந்த பண்பு, கொண்ட கொள்கைக்காக எதையும் இழுக்கும் துணிவு, பிரச்சனை என்றால் துணிந்து நின்று செயலாற்றும் வேகம், எளிதாகக் கோபப்பட்டு விட்டாலும், கோபம் குறைந்த அடுத்த விநாடியே கோபம் கொண்டவரிடமே அன்பாகப் பேசும் பக்குவம், நிரந்திர விரோதம் என்று எதையும் கொள்ளாமல் எளிய மனுதுடன் வாழ்வை அமைத்து கொண்டது, அழகான பெண்களில் மேல் கூடுதல் பரிவு, தான் இருக்கும் இடத்தை நகைச்சுவை பேச்சால் நிறைக்கும் ரசனை எல்லாம் கலந்த ஓர் ஆளுமையே எஸ்.எஸ்.ஆர்.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.