1 review for ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
Add a review
You must be logged in to post a review.
₹55.00
லட்சியக் காதலுக்காகவே லட்சிய வாழ்வு வாழ்ந்த ஒரு இளைஞனின் சோக காவியம் இந்நாவல்.
உணர்ச்சிச் சூழலில் சிக்கித் தவிக்கும் இரு உள்ளங்களை, உணர்ச்சித் ததும்ப புதுமை வேகத்துடன் சித்தரித்திருக்கிறார் புஷ்பா தங்கதுரை. இப்புதினத்தைப் படிப்பவர்கள் அந்த இரு உள்ளங்களின் சோக கீதத்தைக் கேட்பார்கள். வாழ்க்கையில் இழக்கக் கூடாததையெல்லாம் இழந்து, படக்கூடாத துன்பங்களை எல்லாம் பட்டுத், தன் வாழ்வையே காதலுக்காகப் பயணம் வைத்த கதாநாயகன் நரேனுக்காகக் ‘காதல் தெய்வம்’ என்று ஒரு தெய்வமிருந்தால், அத்தெய்வமே கண்ணீர் வடிக்கும்.
Delivery: Items will be delivered within 2-7 days
Kavitha. S –
ஒரு ஊதா பூ கண் சிமிட்டுக்கிறது இந்த தலைப்பில் படம் ஏற்கனவே வந்துள்ளது அதை பார்த்தது இல்லை என்றாலும் கூட, ஏனோ இந்த புத்தகம் வாசிக்க விருப்பம் இல்லை. நல்ல இருக்காது என நானே முடிவு எடுத்து அப்படியே விட்டுவிட்டேன். நேற்று இரவு புத்தகம் வாசிக்க எளிதாக புத்தகத்தை தேடி கடைசியில் இதை வாசிக்க எடுத்தேன்.
ஆர்வமே இல்லாமல் ஆரம்பித்த எனக்கு சில பக்கங்களை படித்த உடனே சுவாரசியம் தோற்றி கொண்டது.வாசிக்க வாசிக்க விறுவிறுப்பு எங்கும் குறையாமல் தோய்வே இல்லாமல் சென்றது..ஒரே மூச்சில் வாசித்து விட்டேன்..வாசிக்கும் போது தோன்றியது இது படமாக்கபட்டதில் ஒன்றும் ஆச்சிரியம் இல்ல. படத்தை பார்க்கும் ஆவலும் தொற்றிகொண்டுவிட்டது.
இந்த கதை, தன் வாழ்க்கையை தன் காதலால் தொலைத்து, ஒரு லட்சிய வாழ்வு வாழும் ஒருவனின் உன்னதமான காதல் காவியம்.
நரேன்,ரமி இருவரின் காதல் அப்படியே கட்டிபோட்டு விட்டது…மறுபுறம் நரேனை பார்த்து (இது போல உன்னத, கண்ணியம் மிக்க, தீர்க்கமான மனநிலை கொண்டவனை எந்த பெண்ணும் விரும்புவாள் அருமையான (நரேன் பாத்திர படைப்பு ) காதல் வயப்படும் ஸ்பானா.கதைக்களம் இந்த மூவரை மையமாக கொண்டு பின்னப்பட்டு இருக்கிறது.
நிறைய இடங்களில் டயலாக் நல்லா இருக்கு. அதில் நான் ரசித்த சில ♥️
ஒரு காதலியால் உதாசீனப்படுத்தபடுவது தான், உலகில் மிகபெரிய துக்கம், அதை விட பெரியது எதுவும் இல்லை
எனக்கு காதல் மீது நம்பிக்கை கிடையாது காதல் என்று ஒன்றும் கிடையாது.அப்படி இருந்தாலும் தெய்வீகம் கிய்விகம் என்று சொல்வதெல்லாம் பொய், இட்ஸ் எ கைன்ட் ஆப் நெர்வல் டிஸ்ஸாடார் ஆர் ஈவன் எ மெண்டல் டிஸ்ஸாடார்.
வாழ்க்கை என்பது வெறும் கல்யாண பந்தத்தில் ஏற்படுவது தானா. இந்த பந்ததிற்கு அப்பால் – மனித நியதிகளுக்கும் அப்பால் நம் மனங்கள் ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்துகின்றன., ஒன்று சேர்ந்து வாழ்க்கை நடந்துகின்றன. அது போதும்.
ஒரு தவறுக்காக ஒரு வாழ்க்கை முழுவதும் தண்டனை கொடுத்து விடாதீர்கள்.
சிறந்த சுவாரசியான காதல் கதையை வாசிக்க நினைப்பவர்களுக்கு இந்த புத்தகம் நல்ல தேர்வாக அமையும்.
நான் உடைந்தே போனாலும், உன் நினைவு இருந்தால போதும் நிமிர்ந்துடுவேன் நானும் ♥️ இந்த பாடல் வரிகள் கதையின் நாயகனுக்கு பொருத்தமாக இருக்கும்…