Be the first to review “பெரியார் ரசிகன்”
You must be logged in to post a review.
₹100.00
ஆத்திகத்திற்கும், நாத்திகத்திற்கும் இடைப்பட்டு வாழ்ந்தவனின் கதை தான் ‘பெரியார் ரசிகன்’
குறைவானவர்கள் தான் கடவுளை மனதளவில் உணர்ந்து வழிபடுகிறார்கள். ‘கடவுள் இல்லை’ என்று சொல்பவர்கள் தமிழகத்தில் குறைவாகத் தான் இருக்கிறார்கள். ‘கடவுளை வியாபாரப் பொருளாக பயன்படுத்துபவர்கள் இவர்களை விட கொஞ்சம் அதிகம். ஆனால், இவர்களை காட்டிலும் பெரும்பான்மையான ஒரு சமூகம் உண்டு. இந்த நாவலில் வரும் சந்திரசேகர் அந்த சமூகத்தை சேர்ந்தவன்.
‘கடவுள் இல்லை’ என்று தெரிந்தும், தன்னை சுற்றியிருப்பவர்கள் மனம் நோகக் கூடாது. அவர்களை இழந்துவிடக் கூடாது என்பதற்காக மற்றவகள் சொன்னதை செய்யும் சமூகத்தை சேர்ந்தவன். பெரியார் மீது ஈர்ப்பு இருந்தும் வெளியே சொல்ல முடியாமல் ஒருதலைக் காதலை போல் உள்ளே வைத்திருக்கிறான். இவர்களால் துணிச்சலாக பகுத்தறிவு பேச முடியாது. பேசினால் அம்மா, அப்பாவின் அன்பை இழக்க வேண்டியது இருக்கும். காதலி, மனைவி நேரம் கிடைக்கும் போதெல்லாம் திட்டுவார்கள். உறவினர்கள் அறவே ஒதுக்கிவிடுவார்கள். இதற்கு பயந்து பெரியாரின் கொள்கையை கொண்டாடவும் முடியாமல், நம்பிக்கையில்லாத ஒன்றை பலர் செய்து வருகிறார்கள்.
பெரியாரின் கொள்கைகளை வெளிப்படையாக ஆதரிக்க முடியாமல், மனதளவில் அவரின் கொள்கையை வைத்துக் கொண்டு வெளியே கடவுளை வணங்குபவர்கள் இங்கு ஏராளம்.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.