PESUM SADHAI PINDAM
ஹாலிவுட் திரைக்கதையாளர், எழுத்தாளருமான டால்டன் ட்ரம்போ அவர்களின்…. ஆங்கில புதினமான ஜானி காட் ஹிஸ் கன் எனும் புதினத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு…. “பேசும் சதைப் பிண்டம்”…. வருகின்ற சென்னை புத்தகக் கண்காட்சியில் சிந்தன் புக்ஸ் அரங்கில் கிடைக்கும் .தேச பக்தியின் அமர காவியங்கள்…. நடுகற்களின் காலம் தொட்டு நிலைத்து நின்றாலும்…. அந்த அமரர்களின்…. மறுபக்கத்து மன ஓட்டம் என்னவாக இருந்திருக்கும் என்பதனை இந்த புதினம் விவரித்திடும்….தேசப் பற்று என்றால் என்ன…. என்பதை புரிந்துணரும் வயதை எட்டுவதற்கு முன்பாகவே…. நாடுகளின்…. நாடுகளை உருவாக்கியவர்களின் நலனுக்காக…. போர் களத்தை எதிர்கொண்ட பல வீரர்களில் ஒரு மாவீரன்…. குண்டுகள் பட்டு கை கால் முகம் சிதறிய கொடுமையான நிலையில்…. உயிரை மட்டும் வைத்துக் கொண்டு…. ஆண்டாண்டுகளாய் வாழ்கிறான்…. அவனே உருவாக்கிய நாள் காட்டியில் தேதி குறித்து…. வாயும் கண்களும் மூக்கும் காதும் அற்ற அந்த முகத்தை வைத்துக் கொண்டு…. பிறரோடு பேசுவதற்காக போராடி ஒரு வித்தையை கற்றுக்கொள்கிறான்….போர்களத்தில் இறந்தவர்களுக்காக பலர் பொதுவெளியில் பலவற்றை உணர்ச்சிப் பெருக்கோடு பேசுகையில்… உயிருள்ள அமர பிணமான இவனுக்கு மட்டுமே…. அங்கு களத்தில் இறக்கின்ற தருவாயில்…. அந்த வீரர்கள் என்ன நினைத்துக் கொண்டிருந்திருந்தார்கள் என்பது தெரிந்திருந்தது….ஒரு துண்டு சதையாக இருந்துகொண்டு ஆயிரம் கேள்விகளை அவன் எழுப்பியிருந்தாலும் …. அவனைப் போன்றவர்களுக்காக அவன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதெல்லாம்….”எங்களை வாழ விடுங்கள்”….
Reviews
There are no reviews yet.