Prachanaiye Varuga Varuga
இது வெற்றிக்கதைகளின் தொகுப்பல்ல. வெற்றியை நோக்கி உங்களைக் கைபிடித்து அழைத்துச் செல்லும் துணைவன்! இந்தப் புத்தகத்தின் வழியாக உங்களுக்கு அறிமுகமாகும் பதினைந்து மனிதர்கள் விநோதமானவர்களோ, வித்தியாசமானவர்களோ அல்லர். அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கின்ற, பேசுகின்ற, பழகுகின்ற சாதாரண மனிதர்களின் சாட்சியங்கள்தான். விஷயம் என்னவென்றால், இவர்கள் யாரும் இன்று உயிருடன் இல்லை. வாழ்க்கையில் இயல்பாக வரும் பிரச்சனைகளைச் சந்திக்க பயந்து, ஒதுங்கி மரணத்தை தேடிக்கொண்டவர்கள். மறைந்துபோன அந்த மனிதர்களின் மரண வாக்குமூலங்கள் வழியே வாழ்க்கையின் வலி நிறைந்த பக்கங்களை விவரித்துச் சொல்லும் அதே வேலையில், அத்தகைய பிரச்னை உங்களுக்கு வரும் பட்சத்தில், அவற்றிலிருந்து மீள்வது எப்படி என்பதற்கான உத்திகளையும், வித்தைகளையும் சொல்லித்தரும் புத்தகம் இது. பிரச்னைகளால் சூழப்பட்ட இருட்டு உலகத்தில் உங்களுக்கான பாதையைத் துல்லியமாகத் தீர்மானிக்க இந்தப் புத்தகம் ஒரு மெழுகுவர்த்தியாக உதவும். நூலாசிரியர் நட. உமாமகேசுவரன் ஒரு காவல்துறை அதிகாரி. சராசரி மனிதர்களுடன் பழகுபவர். அவர்களுடைய பிரச்னைகளைப் புரிந்தவர்.அவற்றுக்கான தீர்வுகள் குறித்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வருபவர்.
Reviews
There are no reviews yet.