Prachnai Theerkkum Thiruththalangal
வாழ்க்கையே வெறுத்துப் போகும் அளவுக்கு ஒரு பிரச்னை வந்து கழுத்தை நெரிக்கும்போது, தீர்வுகளைத் தேடி திசையெங்கும் அலைகிறோம். ‘உங்கள் உள்ளங்கையிலேயே – உங்கள் ஜாதகத்திலேயே இருக்கிறது தீர்வு’ என்று சொல்கிறது இந்த நூல். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் பிரித்து, பிரச்னைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் சொல்லி, இனிமையான இல்லற வாழ்க்கைக்கான கையேடாகத் திகழும் நூல் இது.
* திருமணத்துக்குத் தடையாக இருக்கும் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷத்தை எப்படி எதிர்கொள்வது?
* திருமண வரம் தரும் குரு பார்வை எப்போது கிடைக்கும்?
* திருமணப் பொருத்தம் எப்படிப் பார்த்து, யாரைத் திருமணம் செய்வது?
* ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் கனவு இல்லத்தை கட்ட உதவும் கடவுள் யார்?
* இனிமையான மழலைப்பேறுக்கு உதவும் ஆலயம் எது?
* எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்? அதற்கு வழிகாட்டும் தலம் எது?
* ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எந்த வேலை ஏற்றது? அதற்கு உதவும் இறைவன் யார்?
* கடன், நோய் தீர்க்கும் தெய்வங்கள் எங்கே இருக்கிறார்கள்?
– இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் இந்த நூலில் பதில் இருக்கிறது.
‘குங்குமம்’ இதழில் தொடராக வந்து, பல லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற பகுதி இது. நீங்கள் படித்துப் பயன்பெறவும், உங்கள் இல்லத்தில் பாதுகாத்து வைத்திருந்து ஆலோசனை பெறவும், இது நூல் வடிவில் வெளியானது. தங்கள் வாழ்க்கைப்பாதைக்கு வழிகாட்டும் நூலாக இதைப் பலரும் கருதுகிறார்கள்.

90களின் தமிழ் சினிமா
விக்கிரமாதித்தன் கதைகள்-2
COMPACT Dictionary [ English - English ]
ஸ்ரீ சுகர் ஜீவநாடி அற்புதங்கள்
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
சாத்தன் கதைகள்
ஸ்ரீமத் பாகவதம்
ஸ்ரீ கந்தர் சஷ்டிக் கவசங்கள் ஆறு படை வீடுகளுக்கும் உரியவை ஸ்ரீ திருச்செந்தூர் கவசம் உரையுடன் ஸ்ரீ சண்முகக் கவசம் உரையுடன் ஸ்ரீ கந்தர் அநுபூதி உரையுடன்
சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள்
காஞ்சிக் கதிரவன்
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை 


Reviews
There are no reviews yet.