Rasi Koyilkal
நீங்கள் பிறந்த ராசி என்ன, நட்சத்திரம் என்ன என்பதைப் பொறுத்து, உங்களுக்கு எல்லா வளங்களும் தரும் கடவுளர்களை நீங்கள் அறியலாம்; வணங்கலாம்; வளம்பெறலாம். உங்கள் வாழ்க்கைப் பயணத்துக்கு உதவியாக இருக்கும் இந்த நூல்!
கண் முன்னே எத்தனையோ பாதைகள் கிளை பிரிந்து செல்லும்போது, நம் பயணம் எதில் தொடரப் போகிறது என்ற குழப்பம் ஏற்படுவது இயற்கை. ஒருவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும்போது கவனம் சிதறுவது இயல்பு. நோக்கம் ஒரே மையப்புள்ளியில் குவிந்தால், அந்தப் பணி சிறக்கும். நம்பிக்கை சார்ந்த விஷயங்களிலும் இப்படித்தான். ஆபத்தில் சிக்கிய ஒருவன், பதற்றத்தில் பல கடவுள்களையும் அழைக்க… ‘இவர் போய் காப்பாற்றுவார்’ என அவரும், ‘அவர் போய் கைகொடுப்பார்’ என இவரும் நினைத்துக் கொண்டு வேறு வேலைகளைப் பார்த்ததாகவும், கடைசிவரை அவனுக்குக் கை கொடுக்க யாருமே வரவில்லை என்றும் நம் புராணங்களில் ஒரு கதை உண்டு. கதைதான்! நிஜத்தில் அப்படிக் கைவிடப்படுகிறவர்கள் என யாருமில்லை.
ஆனாலும், இந்தக் கதை ஒரு நீதியை உணர்த்துகிறது. எத்தனையோ நண்பர்கள் இருந்தாலும், மிக நெருக்கடியான தருணங்களில் சிலரை மட்டும் நம்பி ஆலோசனை கேட்கிறோம்; உதவி வேண்டுகிறோம். நம் மீது அக்கறை கொண்டிருக்கும் அவர்கள் நல்லதே செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப்படிச் செய்கிறோம்.
ஆன்மிகத்திலும் இப்படித்தான்! எத்தனை கடவுளர்களை வணங்கினாலும், நம் வேண்டுதலை ஒரு புள்ளியில் குவிக்க வேண்டும். அதற்குத்தான் இந்த நூல்.
பல பதிப்புகள் கண்டு விற்பனையில் சாதனை புரிந்த பெருமைக்குரியது இந்த நூல்

100 வகை ஸ்வீட்கள் தவிர 50 வகை கார பலகாரங்களின் தயாரிப்பு முறைகளும்…
1975
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
21 ம் விளிம்பு
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
13 மாத பி.ஜே.பி ஆட்சி
2400 + Chemistry Quiz
16 கதையினிலே
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
COMPACT Dictionary [ English - English ]
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
18வது அட்சக்கோடு
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
RSS ஓர் அறிமுகம் 

Reviews
There are no reviews yet.