செம்பீரா
Publisher:
ஜீவா படைப்பகம் Author:
எழில்பாரதி
“வாழ்தல் குறித்தான விசயமின்மை” கதாபாத்திரங்கள் வழியே உணர்த்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. “கடவுளும் அவரது குமாரனும்” கதையில் மொஹம்மத் ஹூசைன், “தக்கையிலானது” கதையில் வரும் பயில்வான் ராமுத்தம்பி போன்றோர் சறுக்கிவிட்ட தங்களது வாழ்க்கைத் தடங்களை இழத்தலின் மூலமாக நேர்செய்யப் பார்க்கின்றனர். “வாய்மை எனப்படுவது சாம்பல்” கதை பொதுவுடமைச் சித்தாந்தம் பேசுகிறது. ”மோகினி”யில் ராமசாமி ஐயர் மூலம், சாதி கொண்டு உணர்வுகளை அளவிடும் சமூகத்தின் தலைகளில் இடியென இறக்குகிறார் எழில்பாரதி. காதல், கம்யூனிசம், சாதி, சினிமா என ஒவ்வொரு கதைத் தளத்திலும் அந்தந்த கதாபாத்திரத்தின் மூலம் ஒரு நேரிய எழுத்தாளராக எழில்பாரதியே நம்மோடு பேசுகிறார். ரஷ்யப் புனைவுகளின் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது ஏற்படும் வாசிப்பனுபவம் மேலோங்கி நிற்கிறது. –இயக்குநர். கரு.பழனியப்பன். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் மற்றும் குறுநாவலில் உலவும் கதாபாத்திரங்கள் அனைவரையும் அந்தந்த வயதுகளில் நானும் கடந்தே வந்திருக்கிறேன். செம்பீராக்களும் ரூஸோக்களும் மட்டுமல்ல, அவர்களைக் கடந்து வந்த அனுபவத்தை, புனைவைக் குழைத்து அதன்வழி தன் உணர்வைக் கடத்தும் எழுத்தாளர்கள் எல்லா காலங்களிலும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். விவிலியம் – ரஷ்ய இலக்கியம்- பொதுவுடமைச் சித்தாந்தத்தின் தாக்கங்கள் இணைந்த கலவையாக எழில்பாரதியின் புனைவுமொழி ஒவ்வொரு கதையிலும் ஊடறுத்து ஓடிக்கொண்டேயிருக்கிறது. எல்லாவற்றுக்கும் அப்பால், கதைகளின் வடிவத்துக்குள் வந்து உட்கார்ந்துகொண்டிருக்கும் திரைக்கதைத் தன்மையும் வாசகர்களை ஈர்க்கட்டும் என வாழ்த்துகிறேன்.
– இயக்குநர், வெற்றிமாறன்
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.