தொழிலாளர்கள் சக்கரங்கள் சுழலாது என்று முழங்கினர். ஜெயகாந்தனோ சக்கரம் சுழலும் என்று கதை எழுதினார். இப்போராட்டத்தின் விளைவாக இந்திராகாந்தி 1975ல் அவசர நிலையை பிரகடனம் செய்தார். அவசர நிலை முடிந்த பின் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்போது 1974-ல் வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைவரும் முழுச் சம்பளத்துடன் மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். போராட்டம் ஒடுக்கப்பட்டாலும் படிப்படியாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டது. அந்த வேலைநிறுத்தப் பின்னணியில் உருவானது இந்நாவல்.
ஸ்டிரைக்
Publisher: பாரதி புத்தகாலயம் Author: ராமச்சந்திர வைத்தியநாத்₹250.00
1974 ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் சார்ந்து பின்னப்பட்ட நாவல். மத, மொழி, சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் அங்கு ஐசிஎப் குவாட்டர்ஸில் உருவாகும் ஒருவித பாசமும் பிணைப்பும் இந்நாவலில் இயல்பாய் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.