திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, அடுத்து திராவிடக் கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தொடர்ந்து தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் மு.கருணாநிதியின் சட்ட மன்றப் பணியின் அறுபதாண்டு… இந்த மூன்று தருணங்களும் தமிழ்நாட்டைத் தாண்டியும் இந்தியா முழுமைக்கும் முக்கியமானவை.
ஆனால், இந்தியாவின் தேசிய ஊடகங்கள் வழக்கம்போல இதற்கும் பெரிய கவனம் அளிக்காமலேயே கடந்து போயின. ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரியர் குழுவால் அப்படிக் கடந்து போக முடியவில்லை. எல்லா நிறை – குறைகளைக் கடந்தும், இந்த மண்ணில் மகத்தான ஒரு பணியை, குறிப்பாக சமூக நீதித் தளத்தில் திராவிட இயக்கம் நிறைவேற்றியிருக்கிறது.
அதன் முக்கியமான தளகர்த்தர்களில் ஒருவர் என்பதோடு, இந்த ஐம்பதாண்டுகளில் தமிழகத்தின் நீண்ட கால முதல்வர், சவாலான எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையையும் கொண்டவர் கருணாநிதி. ஜனநாயக நாடு ஒன்றில் 60 ஆண்டு காலம் தொடர்ந்து மக்களால் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு, அதுவும் சாதி ஆதிக்க இந்திய அரசியலில் ஒரு அழுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்து இப்படி சாதித்த வரலாறு கருணாநிதியை அன்றி யாருக்கும் இல்லை.
ஆக இந்த முக்கியமான தருணத்தில் அவருடைய பங்களிப்பைப் பேசும் நூல் ஒன்றை ஏன் நாம் கொண்டுவரக் கூடாது என்ற கேள்வியை நாங்கள் கேட்டுக்கொண்டோம். அதற்கான பதில்தான் இந்தப் புத்தகம். கூடவே திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு பின்னணியையும் அதனால் நிகழ்ந்த நல்ல மாற்றங்களையும் இந்நூலில் தொட்டிருக்கிறோம்.

தெற்கிலிருந்து ஒரு சூரியன்
Publisher: தமிழ் திசை பதிப்பகம் Author: தமிழ் இந்து வெளியீடுOriginal price was: ₹300.00.₹285.00Current price is: ₹285.00.
திராவிடத்தால் வீழ்ந்தோம் என குறை கூறுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் புத்தகம் இது. இந்தியாவில் தமிழ்நாட்டின் வளர்ச்சி, கல்வி நிலை, பெண் சுதந்திரம்,திராவிட இயக்கங்களின் முற்போக்கு திட்டங்கள் என மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சியை விவரிக்கிறது இப்புத்தகம். மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்பதைப் படிக்கும்போது உணரலாம்.
Delivery: Items will be delivered within 2-7 days

 Dravidian Maya - Volume 1
Dravidian Maya - Volume 1						 Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்						 Elementary Principles of Philosophy
Elementary Principles of Philosophy						 27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்						 English-English-TAMIL DICTIONARY
English-English-TAMIL DICTIONARY						 13 மாத பி.ஜே.பி ஆட்சி
13 மாத பி.ஜே.பி ஆட்சி						 PFools சினிமா பரிந்துரைகள்
PFools சினிமா பரிந்துரைகள்						 1777 அறிவியல் பொது அறிவு
1777 அறிவியல் பொது அறிவு						 2400 + Chemistry Quiz
2400 + Chemistry Quiz						 English-English-TAMIL DICTIONARY Low Priced
English-English-TAMIL DICTIONARY Low Priced						![COMPACT Dictionary [ English - English ]](https://bookmybook.in/wp-content/uploads/2024/11/compact-dict.jpg) COMPACT Dictionary [ English - English ]
COMPACT Dictionary [ English - English ]						 1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்						 Moral Stories
Moral Stories						 64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்						 2700 + Biology Quiz
2700 + Biology Quiz						 Compact DICTIONARY Spl Edition
Compact DICTIONARY Spl Edition						 RSS ஓர் அறிமுகம்
RSS ஓர் அறிமுகம்						 Red Love & A great Love
Red Love & A great Love						 Arya Maya (THE ARYAN ILLUSION)
Arya Maya (THE ARYAN ILLUSION)						 Mother
Mother						 2800 + Physics Quiz
2800 + Physics Quiz						 Bastion
Bastion						 A Madras Mystery
A Madras Mystery						
Kathir Rath –
தெற்கிலிருந்து ஒரு சூரியன்
திமுக 1967ல ஆட்சியை பிடிச்சது, அதோட 50வது ஆண்டுவிழாவை முன்னிட்டு இந்த புத்தகத்தை 2017ல கொண்டு வந்தாங்க
நானும் போற புத்தகதிருவிழா எல்லாத்துலயும் விசாரிப்பேன், தீர்ந்துருச்சுங்கம்பாங்க, அவ்வளவு அதிகமாக விற்பனையாச்சு
கலைஞர் இருக்கற வரை எனக்கு பெருசா அவர் மேல அபிப்பிராயம் இல்லை, அவர் நினைவு தப்பி இந்துத்துவா கூட்டம் தன்னோட உண்மையான முகத்தை காட்ட ஆரம்பிச்ச பிறகுதான் கலைஞரோட, திமுகவோட அருமை புரிஞ்சது
அவர் இறந்தப்ப அவரோட எழுத்துக்கள்லாம் வாசிக்கனும்னு முடிவு பன்னேன், ஆனா செய்யலை, இந்தாண்டு நினைவு தினத்துல திரும்ப ஞாபகம் வரவும் உடனே ஆரம்பிச்சேன்
எடுத்ததும் அவரோட எழுத்துக்களை படிக்கறதுக்கு முன்ன அவரை பத்தி எழுதப்பட்ட புத்தகத்தை படிக்க விரும்புனேன், வாசிச்சேன்
இதுல கலைஞரோட புகழ் மட்டும் பாட பட்டுருக்கும்னு நினைக்காதிங்க, மொத்தம் 200 பக்கத்துல பாதிக்கு மேல தமிழ்நாட்டோட வரலாறுதான். குறிப்பாக திமுகவோட ஆட்சி குறித்த தகவல்கள். கலைஞரையும் தமிழ்நாட்டையும் தனித்தனியா பிரிக்க முடியாதுங்கறது வேற விசயம்.
அப்புறம்தான் அவர் குறித்து மற்ற பிரபலங்களின் பார்வைகள், அவரோட பேட்டி எல்லாமே, உண்மையிலேயே இந்த நூல்ல இருக்க புகைப்படங்கள் எல்லாமே தரமா இருக்கு, அதுக்காகவே இந்த நூல் கண்டிப்பா எல்லாருக்கும் வேணும்.
உங்களுக்கு திமுக மேல பெருசா விருப்பம் இல்லாத இருக்கலாம், ஆனா தமிழகத்தோட வரலாறுல ஆர்வம் இருந்தா தாராளமா இதை வாசிக்கலாம்.