1 review for உறுபசி
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹175.00.₹170.00Current price is: ₹170.00.
கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்த இளைஞன் தன் வாழ்நாளில் சந்திக்கும் போராட்டங்களும் அவலங்களும் புறக்கணிப்புகளும் சமூகம் அவனைத் துரத்தி வேட்டையாடியதுமே உறுபசி நாவலின் பிரதான களம்.
Delivery: Items will be delivered within 2-7 days
Kathir Rath –
உறுபசி
எஸ்.ரா எழுதிய நாவல்
இரண்டாவது முறையாக படித்தேன்.
ஒவ்வொரு வகை நூலும் ஒவ்வொரு வகை உணர்வை தரும். ஆனால் மறுவாசிப்பில் அதன் வீரியம் கொஞ்சமாவது குறைந்திருக்கும்.
அது நகைச்சுவையோ, காதலோ, காமமோ, சோகமோ இரண்டாவது முறை படிக்கையில் அதே அளவு உணர்வை தராது
ஆனால் இந்நாவல் அப்படியல்ல. இரண்டாவது முறை படிக்கும் போதும் மனம் முழுக்க வெறுமையை தரும் நாவல். முழுக்க வறண்ட வார்த்தைகளால் பின்னப்பட்ட சிலந்தி வலை.
இறந்து போன தங்கள் நண்பனைப் பற்றி மூன்று நண்பர்கள் அவனுடனான கடந்த காலத்தை அவர்களது பார்வையில் சொல்லிக் கொண்டே, அந்த மரணத்தை கடக்க அவர்கள் முயல்வதை விவரிக்கிறது.
”மனுசன் மட்டும் சுவர்னு ஒரு விசயத்தை கண்டுபிடிக்காம வெட்டவெளிலயே வாழ துவங்கிருந்தா எவ்வளவு நல்லாருந்துருக்கும்?”
“பொண்ணுங்களை வயசுக்கு வந்ததும் கட்டி கொடுத்துடற மாதிரி பசங்களையும் ஏன் பண்ண மாட்டேங்கறாங்க? இந்த காம உணர்வு கரையான் அரிக்கற மாதிரி என்னை முழுசா அரிக்குது, தப்பிக்கவே முடியலை”
“ஆறு முகம், பனிரண்டு கை இருக்க கடவுளுக்கு கூட ரெண்டு காலுக்கு மேல இல்லை கவனிச்சியா? எங்கேயாவது மூணு கால் இருக்க கடவுளை பாத்திருக்கியா?”
“ஒரு முத்தத்துல உன் கற்புக்கு எந்த பாதிப்பும் வந்துடாது”
“மின்சார சுடுகாட்டில் பிணம் எரிவதை பார்த்து விட்டு வரும் வழியில் எரிந்து கொண்டிருந்த வரிசையான தெரு மின் விளக்குகள் அவனை துரத்துவது போல் இருந்தன”
“தினசரி நாளிதழ்கள்ல நடக்கற குற்றங்கள் நடக்கற இடமும் செய்யற ஆளுங்களோட பேர்கள் மட்டும்தான் மாறுது, மத்தபடி மனுசனுக்குள்ள இருக்க அந்த மிருக குணம் ஒரே மாதிரிதான் இருக்கு. அதை படிக்க படிக்க மனுசங்களை பாக்கவே பயமாருக்கு.”
மரத்தடில உக்காந்துருக்கறப்ப நமக்கே தெரியாம காது வரை ஊர்ந்துட்டு வந்துடற கட்டெறும்பு மாதிரி இந்த நாவல் தர உணர்வை புரிஞ்சுக்கறதுக்குள்ள இந்த கதையோட்ட சுழல்ல சிக்கிடறோம்.
ஒரு மாதிரி போதையில மாறி மாறி வெவ்வேற விசயத்தை யோசிச்சுட்டுருக்க மனநிலைக்கு கொண்டு போயிருது.
தவிர்க்க கூடாத நாவல்.
urupasi