1 review for வன்முறையில்லா வகுப்பறை
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹140.00
21 ஆம் நூற்றாண்டு ஆசிரியர்களின் தோழன் இந்நூல்….. லட்சக்கணக்கான மாணவர்கள், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், நூற்றுக்கணக்கான உளவியல் நூல்கள், உலகளாவிய மாற்றுவழி….. கல்வியாளர்கள் வழியே தண்டனையில்லாத பயிற்றுமுறை வன்முறையில்லாத வகுப்பறைநோக்கி புதிய பாதை அமைக்கிறார் ஆயிஷா இரா.நடராசன்…..
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
அனைத்தும் / General
அனைத்தும் / General
சீ.ப்பி. செல்வம் –
என் மாணவர்களுக்காக காத்திருக்கிறேன்…
ஆசிரியர் பணி அறப்பணி என்று சமுதாய பெருவெளி இன்னும் உயிர்ப்புடன் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஒரு மிகப்பெரிய சமூகப் பொறுப்பை சுமந்து கொண்டிருக்கின்ற ஆசிரிய சமுதாயம் மாணவர்களிடையே எவ்வாறு ஒரு இணக்கமான சூழலை பின்பற்றுகிறது என்பதனை ஆணித்தரமாக சொல்லக்கூடிய ஒரு புத்தகம் கல்வியாளர் #ஆயிஷா_இரா_நடராஜன் அவர்கள் எழுதிய #வன்முறையில்லா_வகுப்பறை. ஆசிரியரை இவ்வாறு அவர் வரையறுக்கிறார் “ஆசிரியராக ஒருவர் தனது பணியை தக்கவைக்க தனது துறை அல்லது பாடத்தில் சிறந்த அறிவு பெற்றிருந்தால் மட்டுமே போதாது, அவருக்கு வகுப்பறை உளவியல் தேவை. நேரிடை விளைவு, நடத்தை ஆக்கம்,ஆசிரியர் – மாணவர் உறவு குறித்த உளவியல், மாணவர் ஒழுங்கு மீறி ஏன் நடக்கிறார்கள் – தடுப்பது எப்படி என தன் பணி சார்ந்த வழிகாட்டுதல் தேவை” என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.”எப்படிக் கீழ்ப்படிய வேண்டும் என்று கற்பது அல்ல கல்வி; எப்படி வாழ வேண்டும் என கற்பதே கல்வி. சமூகநீதியை, மனிதநேயத்தை இயற்கை பாதுகாப்பைக் கடைபிடிக்க பயிற்றுவிப்பதே கல்வி” என்று சொல்வது நாம் ஒவ்வொருவரும் நெஞ்சில் ஏற்று அதன்படி நடக்கக் கூடிய வார்த்தைகள் அவை.”நமது வகுப்பறைகளின் ரத்த ஓட்டமே, குறும்புக்கார குழந்தைகள்தான் “என்கிறார் கல்வியாளர் யஷ்பால்.அதுபோன்ற குறும்புகார குழந்தைகள் இருந்தால் அவர்களை நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான பல்வேறு நுணுக்கங்களை இந்த புத்தகம் நமக்கு வாரி வழங்குகிறது. தண்டிப்பதை பற்றி கூறும்போது “தண்டித்தல், தான் செய்த தவறை தொடர்ந்து குழந்தைகள் ஞாபகம் வைத்துக்கொண்டே இருக்குமாறு செய்துவிடுகிறது. நெறிப்படுத்துதல் தவறை மட்டும் சுட்டிக் காட்டுவதில்ல… மாற்று வழியை ஒரு குழந்தை தானே தேர்வு செய்து அந்த தவறை நொடியில் கடந்து விட உதவுவது” ஆகும் என்றும் ஆசிரியர் அவர்கள் கூறுகிறார். மாணவர்களின் குறைகளை கண்டறிந்து அதனுடைய நடத்தை காரணத்தை நாம் அறிந்து அதற்கு ஏற்றவாறு கல்வியை வழங்க வேண்டும் என்று கூறுவதோடு “குழந்தைகள் குறை பிறவிகள் அல்ல; அவர்கள் விரைவில் பெரியவர்களாக முழு மனிதர்களாகி கொண்டிருப்பவர்கள்” என்று மாண்டிச்சேரி அம்மையார் அவருடைய வார்த்தைகளை இங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது. எப்போதும் வகுப்பறைகளை மாணவர்களோடு ஒரு இணக்கமான சூழலை கையாண்டு உற்சாகமான வகுப்பறையாக மாற்றி இருந்தாலே போதுமானது வன்முறை இல்லாத வகுப்பறைகளை நாம் உருவாக்கலாம் என்று ஆசிரியர் கூறுகிறார். காலையிலும் மாலையிலும் அதே மணிதான் ஒலிக்கிறது. காலையில் கசக்கும் அது, பள்ளி முடியும் போது மட்டும் ஏன் இனிக்கிறது? என்ற இந்த கேள்வியை கேட்கின்ற ஆர்.கே.நாராயணனின் இந்த வினா நம்மை ஒரு பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வைக்கிறது. இன்னும் நாம் அறிந்து கொள்ளக்கூடிய, தெரிந்து கொள்ளக்கூடிய விவாதிக்க கூடிய, உணர்ந்து கொள்ளக்கூடிய, மாற்றத்தை நோக்கி செல்லக்கூடிய பல்வேறு விஷயங்களை இந்த நூல் நம்முடைய விவரிக்கிறது. அனைத்து ஆசிரியர்களும் படிக்கக்கூடிய ஒரு உன்னதமான ஒரு நூலாக நான் இதைப் பார்க்கிறேன். இறுதியாக ஜான் ஹோல்ட் அவர்கள் இவ்வாறு கூறுகிறார் “உண்மையான ஆசிரியர்கள் புத்தகத்திலிருந்து பாடம் நடத்துவதில்லை; தங்கள் இதயத்திலிருந்து நடத்துகிறார்கள்” என்று. நானும் இதயத்தை திறந்து காத்திருக்கிறேன் என் மாணவர்களுக்காக…
நூலின் பெயர்: வன்முறையில்லா வகுப்பறை
ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராஜன்
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்