Velaikku Pogathirgal
சில நேரங்களில் எதிர்மறையான விஷயங்கள்தான் முதலில் ஈர்க்கும். அப்படித்தான் இது ‘குங்குமம்’ இதழில் ‘வேலைக்குப் போகாதீர்கள்’ என்ற தலைப்பில் தொடராக வெளிவந்தது. அதற்குக் கீழே சிறிய எழுத்தில், ‘உங்களைத் தேடி வேலை வரும்’ என இடம் பெற்றிருக்கும். இந்தப் புது உத்தியும், தொடரும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இந்தத் தொடர் ‘குங்குமம்’ இதழில் வெளிவந்து கொண்டிருந்தபோதே, ‘எங்கிருந்து இதை மொழிபெயர்க்கிறீர்கள்? இதன் மூலநூலாக இருக்கும் ஆங்கில நூலின் பெயர் என்ன?’ என பல வாசகர்கள் போன் செய்து கேட்டார்கள். தன்னம்பிக்கை தரும் சுய முன்னேற்றக் கருத்துகள் எப்போதும் ஆங்கிலத்திலிருந்துதான் தமிழுக்கு வரும் என திடமான நம்பிக்கை இங்கே பலருக்கு இருக்கிறது. அப்படி இல்லாத ஒரிஜினல் தமிழ் நூல் இது.
வேலைக்குப் போகும் முன்பாக வேலையைக் கற்றுக்கொள்ளும் பலரும், வேலை செய்யும் அலுவலகத்தில் ஆங்காங்கே இருக்கும் தடைகளையும் பள்ளங்களையும் தாண்டி வரும் வித்தையைக் கற்றுக் கொள்வதில்லை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் மனதைப் படிக்கக் கற்றுக் கொள்வதில்லை. வேலை என்பது இவை எல்லாமே கலந்தது என்பது பலருக்குப் புரிவதில்லை. இதனாலேயே ‘வேலை கிடைத்தால் போதும்’ என வேட்கையோடு ஆரம்பத்தில் தேடும் பலர், ‘ஏன்தான் வேலைக்குப் போகிறோமோ’ என சில மாதங்களிலேயே அலுத்துக் கொள்கிறார்கள். இந்த அலுப்பு, வாழ்க்கை முழுக்க தொடர்கிறது. இந்த நூல் உங்களுக்கு நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தை அறிமுகம் செய்யும்; அங்கிருக்கும் விதம்விதமான மனிதர்களை அறிமுகம் செய்யும்; நீங்கள் எப்படி வேலை செய்ய வேண்டும் எனக் கற்றுத் தரும். அலுவலக நிர்வாகி முதல் அடிமட்ட ஊழியர் வரை எல்லோருக்கும் பயன்படும் மந்திரங்கள் இந்த நூலில் உள்ளன. இது உங்களிடம் இருந்தால், நீங்கள் வேலைக்குப் போக வேண்டியதில்லை; வேலை உங்களைத் தேடி வரும்!.
Reviews
There are no reviews yet.