Viduthalai Kalanchiyam (Thoguthi – 1)
“எனது மற்ற பத்திரிகைகள் எப்படி அரசாங்கத்தாரால் ஜாமீன் வாங்கப்பட்டு நடைபெற்று வருகிறதோ அது போலவேதான் ‘விடுதலை’யும், அரசாங்கத்தாரால் ஜாமீன் வாங்கப்பட்டு நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
நான் அரசாங்கத்துக்கு வேண்டியவன் என்றும், மந்திரிகளுக்கு வேண்டியவன் என்றும், எதிரிகள் விஷமப் பிரச்சாரம் செய்து வந்ததைப் பொது ஜனங்களில் சிலரும் நம்பி, சர்க்காரின் சில குற்றமான காரியங்களுக்கும், மந்திரிகளின் சில கவலையீனமான – சுயநலமான காரியங்களுக்கும் நான் ஆதரவளித்து வருவதாகக் கருதி வருவதும் எனக்குத் தெரியும்.
ஆனால், நடுநிலையில் இருந்து பார்ப்பவர்களுக்கும், ஜாமீன் கேட்டல் – பறிமுதல் செய்தல், ராஜ துரோகக் குற்றம் சாட்டித் தண்டித்தல் முதலிய சம்பவங்களை கூர்மையாய் கவனிப்பவர்களுக்கும், நான் அரசாங்கத்தையும், மந்திரிகளையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறவனா? அல்லது அவர்கள் அதிருப்திக்கு ஆளாகித் தொல்லைப்படுத்தப்படுகிறவனா? என்பது விளங்கும்
மற்றொரு உதாரணமும் எடுத்துக்காட்டுகிறேன். அதாவது இந்த ‘விடுதலை’க்கே 1,000 ரூபாய் ஜாமீன் கேட்டதானது, ஸ்தல் அதிகாரியிடமிருந்து ஏற்பட்ட எண்ணம் அல்லவென்றும், மந்திரிகள் ஆதிக்கத்திலிருந்து பிறந்தது என்றும் சொல்லத்தக்க ஆதாரம் பல இருக்கின்றன.”
– தந்தை பெரியார் (‘குடிஅரசு’ – 04.07.1937)

Mother
'நமக்கு நாமே' நாயகனின் முகநூல் முத்துக்கள்
5000 GK Quiz
2700 + Biology Quiz
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
Moral Stories
PFools சினிமா பரிந்துரைகள் 


Reviews
There are no reviews yet.