Viduthalai Pathivukal
தாழ்த்தப்பட்ட மக்கள் தலைமுறை தலைமுறையாய் இழிவைச் சுமந்துகொண்டு, சாதி இந்துக்களுக்கு எப்பொழுதும் அடிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக மிகத்தீவிரமாகக் காந்தியும் அவரது சகாக்களும் வேலைகளைச் செய்திருக்கிறார்கள் என்பதனை நமக்கு வரலாறு சுட்டிக்காட்டுகின்றது.
பிரிட்டிஷ் அரசிடம் டாக்டர் அம்பேத்கர் போராடி வாங்கிய தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் களவாடப் பட்டன. இந்தியாவின் இளையதலைமுறையினர் காந்திதான் தீண்டாமையை ஒழிக்கப்பாடுபட்டார் என்றும், காந்தி நீதியும், நேர்மையும் உள்ளவர் என்றும் எண்ணுகிறார்கள்.
ஆனால் இது உண்மையல்ல. இந்த புத்தகத்தைப் படித்த பிறகு அப்படி எண்ணமாட்டார்கள். காந்தியடிகளிடம் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனையில் நீதியும், நேர்மையும் சிறிதளவுகூட இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டி இருக்கும். வரலாறுகளை வாசிக்கும்பொழுது தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்குக்கூட இவர்களுக்கு அறிவு எட்டவில்லை என்றே தோன்றுகிறது.
யார் மீதும் பழி சுமத்திக் குற்றவாளியாக்குவது எமது நோக்கமல்ல. குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களின் இன்றைய தலைமுறையினருக்கு வரலாறுகளை சுட்டிக்காட்டி சமூக, பௌத்த கலாச்சார அரசியலை முன்னெடுக்க அவர்களைத் தூண்டுவதற்காகவே.
Reviews
There are no reviews yet.