விண்மீன் விதைகள்
இந்திரா பங்கஜம்
இந்திரா சிஎம் எழுதிய நாவல்…
இது ஒன்றே போதும்…
படிக்கும் ஆர்வம் மேலோங்க…
கதையின் ஆரம்பமே…
எளிமையாய் எதார்த்தமாய்…
நம் வாழ்வியலோடு ஒன்றி…
நம்மை கதையோடு ஒருங்கிணைய வைத்துவிடுகிறது…
#மீனு கதையின் நாயகி…
உழைப்பு, முயற்சி, வைராக்யம் இதற்கு இணையான சொல் இவளே…
#சிபி…
நம் நாயகன்…
அடடா பேரழகன்…
இவனை நண்பனாக, காதலனாக, கணவனாக அமையப்பெற்ற மீனு அதிர்ஷ்டசாலியே…
நல்ல ஆண்மகன், நல்ல கணவன் இந்த சொற்களுக்கு ஈடாக…
தமிழில் வேறு சொல் தேடினால்…
அது சிபியாகத்தான் இருக்கும்…
மீனுவில் பால் அவன் கொட்டும் காதல் மழையில்…
நானும் நனைந்தேன்…
அங்கு நான் மீனுவாக மாறியும் போனேன்…
#ரதி…
இவள் பாரதி கண்ட புதுமை பெண்…
வேண்டும் இவள் போல் மாதர்கள் இங்கு…
பல மடையர்களையும் அவர்களின் மடைமைகளையும் கொழுத்த…
மீனுவிற்காக அந்த அரசாங்க அதிகாரியை…
வெளுத்து வாங்கியதில்…
எழுத்துக்களில் அனல் பறந்தது…
#தேனு
சிறகொடிக்கப்பட்ட தேவதை இவள்…
விம்மி அழாமல்…
இவளை கடப்பதென்பது…
இயலாத காரியம்…
இனி எங்கு இவள் பெயரை கேட்டாலும்…
துளி கண்ணீர் விழி வழியே எட்டி பார்க்கும்…😥
இவர்களுக்கு உயிர் கொடுத்து…
எழுத்துக்களாக உலவ விட்டு…
நம் உணர்வுகளோடு ஒன்ற செய்த பெருமை…
ஆசிரியரை சாரும்…
இயல்பாக ஆரம்பித்து…
இன்றியமையாத தேவை ஒன்றை வழியுருத்தி…
அதற்கு வெகு அழகான தீர்வும் தந்துள்ளார்…
நம் ஆசிரியர்…
அதற்காக என் பாராட்டுக்கள்…
கதையின் முடிவை…
நம் அரசாங்கம் கையாண்டால்…
அநாதை என்ற வார்த்தை…
நிச்சயமாய் வழக்கொழிந்து போகும்…
ஆனால்…
அதை செய்ய இவர்களுக்கு எங்கே நேரம்???😥😥
கடைசியாக…
#தமிழ்…
அப்பாவி முரட்டு சிங்கிள்😂
கடைசிவரை அவர் கமிட் ஆகாதது கொஞ்சம் வருத்தமே…
எனக்கு திருமணம் ஆகாமல் இருந்திருந்தால்…
நானே அந்த அப்பாவிக்கு Propose பண்ணியிருப்பேன்😜😜😜
#விண்மீன்_விதைகள்
வாழ்வியலின் நம்பிக்கையை விளைவிக்கிறது…
வாழ்த்துக்கள் #இந்திரா_சிஎம் 💐💐💐
– தசரதன்
Reviews
There are no reviews yet.