யூதர்கள் – வரலாறும் வாழ்க்கையும்:
5000 வருட சரித்திரம். அருமையான கலாச்சாரப் பின்புலம். வண்ணமயமான வாழ்க்கை, பண்டிகைகள் . ஆனால் வரலாறில் மட்டும் எத்தனை ரத்தம் !
₹300.00
நோபல் பரிசு பெற்றவர்கள், ஆஸ்கர் விருது பெற்றவர்கள், மிகப் பெரிய கலைஞர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் – எந்தத் துறையிலும் எத்தனை பேரை வேண்டுமானாலும் எடுத்து ஒரு பட்டியல் போடுங்கள். அதில் எத்தனை பேர் யூதர்களாக இருக்கிறார்கள் என்று பாருங்கள். வியந்து போவீர்கள்! தமது சரித்திரம் முழுதும் எத்தனைக்கெத்தனை அவர்கள் கஷ்டப் பட்டார்களோ, அத்தனைக்கத்தனை சாதித்தும் இருக்கிறார்கள்!
உலகின் மிகப் புராதனமான மதங்களுள் ஒன்று யூதமதம்.
எகிப்திலிருந்து யூதர்கள் முதல்முதலில் பாலஸ்தீனை நோக்கி இடம்பெயர்ந்து வந்தது முதல் ஒவ்வொரு நாளும் போராட்டம் தான், யுத்தம்தான்.
வாழ்க்கைப் பிரச்சனைகளுக்காக ஐரோப்பா முழுவதும் பரவி, இடம்பெயர்ந்துகொண்டே இருந்தவர்களுக்கு, இருபதாம் நூற்றாண்டு மிகுந்த சோதனைகளைக் கொடுத்தது. ஹிட்லரின் ஜெர்மனியில் கொத்து கொத்தாக அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
தமது சரித்திரமெங்கும் அடித்துத் துரத்தப்பட்டுக்கொண்டே இருந்த யூதர்கள், தமக்கென்று இஸ்ரேல் என்கிற தனிநாடு அமைந்தபிறகு, அந்த மண்ணின் பூர்வகுடிகளான பாலஸ்தீன் அரேபியர்களை அதேபோலத்தான் அடித்துத் துரத்தினார்கள்; இன்றும் துரத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு பக்கம் வன்மம், துவேஷம், குரோதம். அதனால் நிரந்தர யுத்தம். இன்னொரு பக்கம் சுய வளர்ச்சியில் கட்டுக்கடங்காத ஆர்வமுடன் அத்தனை துறையிலும் சாதனை படைக்கும் வேகம், ஆர்வம், மேலோங்கிய திறமை, அப்படியே படம்பிடிக்கிறது இந்நூல்.
யூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல், அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்கும் இடையே வெகு அநாயாசமாக ஒரு மேம்பாலம் கட்டுகிறது!
Delivery: Items will be delivered within 2-7 days
ART Nagarajan –
யூதர்கள்.
வரலாறும் வாழ்க்கையும்,
முகில்.
5000 வருட சரித்திரம்,
மிகச் சிறந்த கலாச்சாரம்
வரலாற்றில் மட்டும் ரத்தம்.
இயேசு
தன்னை கடவுள் என்று ஒருபோதும் கூறியதில்லை!
மாறாக,
நான் ‘தச்சனின்’
(கார்பெண்டர்) மகன்
என்று தான் இயேசு கூறியிருக்கிறார்!
யூத மதத்தில் பிறந்த “சீர்திருத்தவாதி”.
பழமை வாதிகள்
இயேசுவை
கொலை செய்ய
முயற்சி செய்து,
அதில் வெற்றியும்
அடைந்தார்கள்,
அது ஒரு தனி வரலாறு !
பூக்கள் பூத்துக் குலுங்கிய “செர்ஸிஸ்” மரத்தில்
தூக்கில் தொங்குவதற்காக
ஒரு கயிறை கட்டி உயிரை மாய்த்துக்கொண்டான்
யூதாஸ்.
இயேசுவின் பனிரெண்டு சீடர்களில் ஒருவன்,
தான் செய்த
குற்றத்தை உணர்ந்து உயிரை இழந்தான்.
பாவத்தின் சம்பளம் மரணம்.
ஆதாம் ஏவாளின்
வம்சம் தழைத்து,
மனித குலம்
பல்கிப் பெருகி,
அவனது
பத்தொன்பதாவது
பேரனாக பிறந்தவர்
“ஆப்ரஹாம்”.
அவரது காலம் கி. மு. 1812.
இவரது மனைவி சாராவுக்கு பிறந்தவர் “ஈசாக்”
வேலைக்காரி ஆகார்
என்பவருக்கு பிறந்தவர் “இஸ்மயீல்”.
இந்த இருவர் தான்
இரு மாபெரும் இனங்களின்
மூல வித்துக்கள்.
இஸ்மயீல் வழி வந்தவர்கள் அரேபியர்கள்,
ஈசாக்கின் வழி வந்தவர்கள் யூதர்கள்.
ஐரோப்பாவின்
முப்பெரும் மதங்களான
யூத வேதமான “தோரா”
கிறிஸ்தவர்களின்
வேதமான “பைபிள்” இஸ்லாமியர்களின்
புனித வேதமாகிய “குரான்”
இந்த மூன்றுமே
இதை கூறுகின்றன!
எகிப்திலிருந்த இஸ்ரேவேலியர்களை அழைத்துக்கொண்டு
“மோசஸ்” மற்றும்
அவரது சகோதரர் “ஆரோன்” ஆகிய இருவரும்
செங்கடலை கடந்து வந்து “சினாய்”
மலைமேல் சென்று
திரும்பி வரும்போது
கட்டளைகள் அடங்கிய கற்பலகைகளுடன்
பிரகாசமாக மோசஸ் வந்தார்.
அவர் கொண்டுவந்த கற்பலகைகளில் இருந்ததே யூதர்களின் வேதம்
“தோரா”(Torah)
யூதர்கள் எகிப்திலிருந்து
முதன் முதலாக இடம்பெயர்ந்து பாலஸ்தீனை நோக்கி
வந்தது முதல்
ஒவ்வொரு நாளும்,
போராட்டம்தான்,
யுத்தம் தான்!
இஸ்லாமியர்கள்
வசமிருந்தது “ஜெருசலேம்”
கர்த்தர் இயேசு
வாழ்ந்த இடம்.
அங்கு தான்
அவரது கல்லறை இருக்கிறது,
அது இஸ்லாமியர்கள் வசம் இருக்கக்கூடாது,
அதை மீட்கவேண்டும்
என போப் அர்பன் 2
அழைப்பு விடுத்து
போரை துவக்கிவைத்தார்!
கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேமை
கைப்பற்றும் போர் என்பதால் அனைவரும் கைகளில்
“சிலுவை” ஏந்திக்கொண்டு
போர் புரிந்தனர்.
அதைத்தான் வரலாறு
“சிலுவைப்போர்” என பதிவு செய்திருக்கிறது.
இஸ்லாமியர்களோடு, யூதர்களையும்
கொன்று குவித்தது
ரோமானிய கிறிஸ்தவ படை!
கிறித்தவத்திலிருந்து
பிரிந்து சென்று
சீர்திருத்தங்கள் செய்த
“ப்ராட்டஸ்டண்ட்’
மதத்தை சேர்ந்த
மார்ட்டின் லூதர் கிங்
(சீனியர் )
யூதர்களை கொல்லுங்கள்
என்று ரத்த வெறி பிடித்த கடிதங்களை
கிறிஸ்தவர்களுக்கு எழுதினார்,
யூதர்களை கண்டவுடன்
கொலை செய்ய
போதனைகளும் செய்தார்!
சிலுவைப் போர்கள்
ஆறு, ஏழு என நீண்டுகொண்டே நூற்றிஐம்பது ஆண்டுகள்
(கி. பி. 1095-1250)
நடந்து முடிந்தாலும் முடிவில் ஜெருசலேம் இஸ்லாமியர்கள் வசமே இருந்தது.
வாழ்க்கை
பிரச்னைகளுக்காக
ஐரோப்பா முழுவதும் பரவி,
இடம்பெயர்ந்து கொண்டே இருந்தவர்களுக்கு,
இருபதாம் நூற்றாண்டில்
மிகுந்த சோதனைகள் தந்து கொத்து கொத்தாக கொன்று குவித்தவர் ஹிட்லர்.
சரித்திரம் நெடுக
துரத்தப்பட்ட யூதர்கள், தமக்கென்று
“இஸ்ரேல்” என்கிற
தனிநாடு அமைந்தபிறகு,
அந்த மண்ணின்
பூர்வ குடிகளான
பாலஸ்தீன அரேபியர்களை ஹிட்லரைப் போலவே
அடித்து துரத்தினார்கள்.
இன்றும் துரத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
1947, பிப்ரவரி 14, பிரிட்டன்
இந்தப் பிரச்னைக்கான
தீர்வு காணும் பொறுப்பை ஐ. நா. சபையிடம் ஒப்படைத்தது.
பாலஸ்தீனம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
பூர்வீக அரேபியர்கள்
வாழும் பகுதி
பாலஸ்தீன் எனவும்,
யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி
இஸ்ரேல் எனவும்,
1947 நவம்பர் 29 அன்று
ஐ. நா. சபை
வாக்கெடுப்பு நடத்தி
அதிகார பூர்வமாக
அறிவித்தது.
நாட்கள் ஆக, ஆக, பாலஸ்தீனத்தில்
தீவிர வாத குழுக்கள்
முளைத்தது.
ஒருபக்கம் வன்மம்,
துவேசம், குரோதம்,
அதனால் நிரந்தர யுத்தம்.
மறுபுறம் வளர்ச்சியில் கட்டுக்கடங்காத ஆர்வம். அத்தனை துறைகளிலும்
சாதனை செய்யும் யூதர்கள்.
யூதர்கள்,
இஸ்லாமியர்கள்,
கிறிஸ்தவர்கள், என
அப்படியே படம் பிடித்து
நம் முன் நிறுத்துகிறது
இந்த நூல்.
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்,
ART. நாகராஜன்,
புத்தக வாசல், மதுரை.
16.05.2020.
Balaji –
#யூதர்கள்
பல்லாயிரம் ஆண்டுகளாக நாடற்ற நாடோடிகளாய் அடைக்கலம் தேடி உலகெங்கும் ஒரு இனம் சுற்றித் திரிந்திருக்கிறது. எங்கு சென்றாலும் வெறுத்து, ஒதுக்கப்பட்டு அடித்து துரத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு எந்த இனம் மீது வெறுப்பும், கோபமும் உமிழப்பட்டது என்று கேட்டால், அதற்கான பதில் யூத இனம் என்பதே, தற்போது இஸ்ரேலை இன்முகத்தோடு ஆட்சி செய்து வரும் யூத மக்களே ஆண்டாண்டாக அகிலமெங்கும் அடித்து துரத்தப்பட்டார்கள்.
ஆபிரகாம் என்பவர்தான் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற முப்பெரும் மதத்தின் மூலவராக இருந்துள்ளார். இந்த 3 மதங்களும் ஆபிரகாம் என்ற ஆலமரத்தின் விழுதுகளே. இன்றைய இஸ்ரேலின் ஜெருசலேம் நகர்தான் இந்த மூன்று மதத்தினருக்கும் புண்ணிய பூமி, புனித ஸ்தலம், பிறந்த வீடு, புகுந்த வீடு எல்லாம்…
ஆனால், கால ஓட்டம் என்னும் கடலில் சிக்கியதால் இந்த மூன்று மதத்தினரும் தனித்தனியாகவே கரை ஒதுங்கினர். இவர்களில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தத்தமது மதத்தை பாரெங்கும் பரந்து விரிய செய்கையில் அவர்களைப் போலவே ஆபிரகாம் வழித்தோன்றிய யூதர்களால் மட்டும் அவ்வாறு செய்ய முடியவில்லை. யூதர்கள் கால்வைத்த இடமெல்லாம் கண்ணி வெடியாக மாறியது. தொட்டதெல்லாம் துரோகத்தில்போய் முடிந்தது.
யூதர்களை உலகமே வெறுத்ததற்கான காரணத்தை ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ‘பேரினவாதம்’. நாங்களே கடவுளின் குழந்தைகள், நாங்கள் மட்டும்தான் உலகை ஆளப் பிறந்தவர்கள் என்று யூதர்கள் தற்பெருமை ததும்பி தம்பட்டம் அடித்ததன் விளைவால் அவர்கள் ஆண்டாண்டாக அமில சோதனையை சந்திக்க நேரிட்டது. 5 ஆயிரம் ஆண்டு பழமையான வரலாற்றையும், கலாசாரத்தையும் யூதர்கள் கொண்டிருந்தாலும் அந்த வரலாறு அவர்களின் ரத்தத்தாலேயே எழுதப்பட்டது. அதுவும் அவர்களின் உடலைக் கசக்கிப் பிழிந்து பீறிட்ட ரத்தத்தை மையாகப் பயன்படுத்தி பக்கம் பக்கமாக தீட்டப்பட்ட திகிலூட்டும் வரலாறு அது.
சரித்திரம் என்ற சமுத்திர நீரோட்டத்தில் கிறிஸ்தவர்கள், ரோமானியர்கள், அரேபியர்கள், மங்கோலியர்கள், கொசாக்கியர்கள், ஜெர்மானியர்கள் என்று வந்தவர், போனவர் அனைவராலும் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டிருக்கிறார்கள் யூதர்கள். அதிலும் குறிப்பாக நாஜிக்களின் நாயகனான ஹிட்லரின் வெறியாட்டத்தில் ஒட்டுமொத்த யூத இனமே அழியும் தருவாய்க்கு சென்றுள்ளது. ஆனாலும் வெட்ட வெட்ட துளிர்க்கும் குரோட்டன்ஸ் செடி போல யூதர்கள் ஒவ்வொரு முறையும் முளைத்து வந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தையே அதிகரிக்கும்.
பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு சர்வாதிகாரிகளால் இனப்படுகொலைகளை சந்தித்தாலும் அவர்கள் பீனிக்ஸ் பறவையாகத்தான் ஒவ்வொரு முறையும் உயிர்த்தெழுந்து வந்தார்கள். இதன் பின்னணியில் இருப்பது யூதர்களிடையே இன்றளவும் இம்மியளவு குறையாமல் காணப்படும் இனப்பாசம். ஜெருசலேம் மீதான நேசம். இதனால்தான் பாலஸ்தீனம் என்ற நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக துண்டாடி, அதை மையமாக கொண்டு தங்களுக்கென்று தனி நாடு உரிமை கோரி, அதில் வாகையும் சூடி தற்போது நாடு கொடுத்தவர்களையே நடுத்தெருவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
உலகுக்கு கையூட்டு கலாசாரத்தை கற்றுக் கொடுத்ததும் இவர்கள்தான். காட்டிக்கொடுக்கும் கலாசாரத்தை கற்றுத் தந்தவர்களும் இவர்கள்தான். நவீன வேளாண்மை, வங்கிசார் பொருளாதாரம், விஞ்ஞான வளர்ச்சி ஆகியவற்றை புகுத்தியதும் இவர்கள்தான். உலகின் செல்வ சீமான்கள், சிறந்த உளவாளிகள், அதி புத்திசாலிகள் என எல்லா பட்டத்தையும் யூதர்களுக்கே சூட்டலாம். சரித்திர பிரவேசத்தில் தொடர் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் பெயர்போன யூதர்களின் ஒட்டுமொத்த வரலாற்றையும் அங்குலம் அங்குலமாக அலசும் நூல் இது. படித்து பகிர்வோம்!
Arunthathi –
புத்தகம் : யூதர்கள்
ஆசிரியர் :முகில்
மற்ற நூல்களை விடவும் வரலாறு சம்பந்தமான நூல்களை எழுதுவதற்கு நிறைய மெனக்கெடல்கள் தேவைப்படும். இது நான் வாசிக்கும் எழுத்தாளர் முகில் அவர்களின் நான்காவது புத்தகம். ஏராளமான தகவல்கள் நிறைந்துள்ள புத்தகம்.
உலகம் முழுவதிலும் இருந்து தூரத்தியடிக்கப்பட்ட ஒரு இனம். கொலை செய்ய வேண்டுமா யூதர்கள் இருக்கிறார்களே பாலியாடுகளாக என நினைத்த போதெல்லாம்,கணக்கின்றி கொல்லப்பட்ட இனம்.
முதல் பாகம் யூத மதம் உருவான வரலாற்றை கூறுகிறது. மிக நீண்ட வரலாறு….தனி நாடென்று ஒன்றை உருவாக்கி கொள்ள அதுவும் கடவுளின் கட்டளை படி உருவாக்கி கொள்ள நிறைய யூத உயிர்கள் பலியாகின்றன.இறுதியில் ஜெருசலேம் தான் யூதர்கள் வாழ கடவுள் அருளிய நாடு என பாலஸ்தீனம் நோக்கி நகர்கிறது யூத வரலாறு.
இரண்டாம் பாகத்தில் எல்லாராலும் வெறுக்கபட்ட தூரத்தியடிக்கப்பட்ட யூதர்களை அரவணைக்கிறது இஸ்லாமியம்.. இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்ட கதையாகிறது. இடம் கொடுத்த முஸ்லிம்களை என்ன சங்கதி என யூதர்கள் கேட்கும் நிலை.சொந்த மண்ணிலே அகதிகளாகிறார்கள் அரேபிய முஸ்லிம்கள்.
மூன்றாம் பாகம் இஸ்ரேல் தேசம் உருவான கதை(?) பாலஸ்தீனியர்களை பலிகடவாக்கி யூதர்கள் நாடு பறித்த கதை… கொண்டாட்டத்தில் மிதந்தவர்களுக்கு எமனாக வந்தார் ஹிட்லர். ஹிட்லருக்கு ஒரே கொள்கை யூத இனம் அழிய வேண்டும். யூதர்களை கொன்று குவிப்பது என்பது ஹிட்லரின் பொழுதுபோக்கு.. ஹிட்லரின் மறைவுக்கு பின் அவர்களின் வாழ்வில் தென்றல் வீசுகிறது அமெரிக்காவின் தலையீட்டால் … காலம்காலமாக பாலஸ்தீனிய மண்ணில் வாழ்ந்தவர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்.. பாலஸ்தீனம் இரண்டாக பிளக்கிறது.தியோடர் ஹெசில் என்ற யூதரே இஸ்ரேல் உருவாக முழுக்காரணம். பணத்தை வட்டிக்கு விடுதல், நிலம் கையகப்படுத்தல், லஞ்சம் கொடுத்தல் போன்றவை உருவானது கிட்டத்தட்ட இக்காலத்தில் தான்.
நான்காம் பாகத்தில் முழுக்க முழுக்க யூதர்களின் வாழ்க்கை, திருமணம், இறப்பு, பண்டிகைகள் என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முழுவதிலும் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கு தனி தேசம் என்ற ஒன்று உருவானதற்கு காரணம் அவர்களின் இன ஒற்றுமை மட்டுமே… யூதர்கள் மத நம்பிக்கை அளவுக்கு அதிகமாக உள்ளவர்கள், நிறைய சடங்குகளை பின்பற்றுப்பவர்கள், தன் இனத்தின் மீது அளவு கடந்த பற்று வைத்துள்ளவர்கள், தீவிர கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என யூதர்களை பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம்… புத்தகத்தில் உள்ளவற்றை சொல்லிக்கொண்டே போனால் ஒரு நாள் போதாது.
ஹிட்லர், மொசாட், இரண்டாம் உலகப் போர் போன்ற நூல்களில் யூதர்களை பற்றி படித்து இருந்தாலும் யூத வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
navaneethan s –
நன்று