“உ.வே.சா. வின் ‘என் சரித்திரம்’ நூலை முழுமையாக வாசித்த பின்னர்… சில செய்திகளை இக்காலச் சூழலில தொடர்புபடுத்தி என் மனம் ஆராய்ந்தன் விளைவே இந்நூல்” என்கிறார் நூலாசிரியர் சுபாஷிணி.
“… நூலைப் படிப்பவர்கள் அய்யரவர்களுடன் உலா வருவது போஎற மெய்நிகர் தன்மையைப் பெறுவர் என்பதே உண்மை” என இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள கடலோடி நரசய்யா கூறியுள்ளார்.
முனைவர் க. சுபாஷிணி – மலேசியாவின் பினாங்கு நகரத்தில் பிறந்து, பள்ளிக் கல்வியைப் பினாங்கிலும் பின் கணினி இயந்திரவியல் துறையில் உயர்கல்விப் புலங்களை ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் முடித்தவர். ஜெர்மனியில் ஒரு சர்வதேச கணினி நிறுவனத்தில் ஐரோப்பிய பகுதியின் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிபவர். தமிழ் மரபு அறக்கட்டளையைத் தோற்றுவித்து, அதன் தலைவராக இருந்து, சர்வதேச அளவில் தமிழுக்குத் தொண்டாற்றிவருகிறார். இங்கிலாந்தில் உள்ள பிரித்தானிய நூலகத்துடன் இணைந்து அரிய தமிழ் நூல்களின் மின்னாக்கத்தினைச் செயல்படுத்தியுள்ளார். தமிழ்ப்பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழகமெங்கும் ஓலைச்சுவடி தேடும் திட்டத்தை 2010ம் ஆண்டு செயல்படுத்தியுள்ளார். இதன் மூலம் 89,000 தமிழ் ஓலைச் சுவடிகள் தமிழகமெங்கும் தேடிச் சேகரிக்கப்பட்டுப் பின் அவை தமிழ் கல்விக் கழகத்தால் மின்னாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. டென்மார்க் நாட்டின் கோப்பன்ஹாகன் நகர அரச நூலகத்தில் உள்ள 1800 ஓலைச்சுவடிகளையும், பிரான்சின் பாரிஸ் நகரிலுள்ள அரச நூலகத்திலுள்ள அரிய 1200 தமிழ்ச் ஓலைச் சுவடிகளையும் மின்னாக்கம் செய்துள்ளார்.
தமிழகம் மற்றும் உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள பல பல்கலை மற்றும் கல்விக் கழகங்களில் தமிழ் மொழி, தமிழர் வரலாறு தொடர்பாக 500க்கும் மேற்பட்ட ஆய்வுரைகளை நிகழ்த்தியுள்ளார். உலகளாவிய அளவில் ஏறக்குறைய 800க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளதோடு அவை பற்றிய 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். அதன் தாக்கத்தில் தமிழகத்தில் இதுவரை சில பள்ளி மற்றும் கல்லூரிகளில் அருங்காட்சியகங்களை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தமிழர் வரலாற்றுச் செய்திகளைத் தாங்கிய 300க்கும் மேற்பட்ட தமிழகம், தமிழர் சார்ந்த வரலாற்று வீடியோ பதிவுகளை இதுவரை தயாரித்து வெளியிட்டுள்ளார். மேலும், வாய்மொழி இலக்கியங்களை ஆவணப்படுத்தித் தமிழகத்தின் நாட்டார் இலக்கியத் தொகுப்புகளாகக் கணினி ஊடகத்தின் வழி மின்பதிவாக்கியுள்ளார். தமிழ்க் கல்விக்கழகத்தின் ஐரோப்பிய தொடர்பாளராக, பல ஆய்வு மாணவர் மாணவியர்களை வழி நடத்தியுள்ளார். தொடர்ந்து தமது தமிழ் ஆய்வுகளை முன்னெடுத்துவருகிறார். www. tamilheritage.org, மின்தமிழ் மடலாடற்குழுமம் போன்ற இணையத் தளங்களை நடத்தி வருகிறார். மின்தமிழ்மேடை எனும் தமிழ் ஆய்விதழின் ஆசிரியராகவும் இருக்கின்றார். இலக்கிய இதழான கணையாழி மாத இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிப்பதோடு, ஐயை உலகத் தமிழ் மகளிர் மன்றத்தின் ஆலோசகராகவும் செயல்பட்டுவருகின்றார்.
உ வே சாவுடன் ஓர் உலா
Publisher: ஆழி பதிப்பகம் Author: க. சுபாஷிணி
₹500.00 Original price was: ₹500.00.₹475.00Current price is: ₹475.00.
தமிழ்த்தாத்தா உ வே சாமிநாதய்யரின் வாழ்க்கைவரலாற்றை எளிய மொழியில் ஒரு நாவலைப்போல சுவையாக எழுதியிருக்கிறார் சுபாஷினி.
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: VC 337
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, சுயசரிதை / தன் வரலாறு, தமிழர்கள் வரலாறு / Tamilan's History, வரலாறு / History
Tags: ஆழி பதிப்பகம், உ.வே.சா, க.சுபாஷினி, வாழ்க்கை வரலாறு
Description
Reviews (0)
Be the first to review “உ வே சாவுடன் ஓர் உலா” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5
Sale!
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Rated 5.00 out of 5
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5
Reviews
There are no reviews yet.