1 review for எனதருமை டால்ஸ்டாய்
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹100.00
டால்ஸ்டாயில் துவங்கி தாகூர் வரையிலான இலக்கிய ஆளுமைகளின் மேன்மைகளை அவர்களது படைப்பு மற்றும் வாழ்வியல் நிகழ்வுகளோடு பதிவு செய்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் எனதருமை டால்ஸ்டாய்.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
அனைத்தும் / General
Bhojan –
உலக இலக்கிய ஆளுமைகள் பற்றிய கட்டுரை தொகுப்பு
புத்தகம் பற்றி
எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் புத்தகம் என்றாலே ஒரு வைகையான ஆர்வம் தான் மனதிற்குள் வருகிறது.அதுவும் இலக்கிய ஆளுமைகள் என்றால் சொல்லவே தேவை இல்லை இந்த புத்தகத்தை பொறுத்த வரை மொத்தம் 20 தலைப்புகளில் கட்டுரை இருக்கிறது வேறுவேறு நாடுகளில் உள்ள இலக்கிய ஆளுமைகள் பற்றிய தகவல்கள் நாம் இந்த புத்தகத்தில் பார்க்க முடிகிறது.
டால்ஸ்டாய்,தஸ்தாயெவ்ஸ்கி மற்றும் செக்கோவ்
முதல் 6 கட்டுரை ரஷ்ய இலக்கிய ஆளுமையான டால்ஸ்டாய் ,தஸ்தாயெவ்ஸ்கி மற்றும் செக்கோவ் பற்றியது. அதிலும் குறிப்பாக டால்ஸ்டாய் புத்துயிர் நாவல் எழுதிய காரணமாக இருந்த டுகோபார்ஸ் மக்கள் பற்றிய வரலாறு தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று அடக்குமுறை காரணமாக ரஷ்யா இருந்து கனடா புலம் பெயர இருந்த மக்களுக்கு டால்ஸ்டாய் உதவி செய்வததற்காக எழுதிய புத்தகம் தான் இந்த புத்துயிர் நாவல் என்று எஸ் ரா அவர்கள் சொல்கிறார். இரண்டாவது கட்டுரை டால்ஸ்டாயின் மகள் மாஷா பற்றிய கட்டுரை இதில் மாஷா மீது டால்ஸ்டாய் கொண்டு இருந்த அன்பு பற்றி சொல்லி இருக்கிறார் .அது மட்டும் இல்லாமல் டால்ஸ்டாயின் குணநலன்கள் என்ன என்ன அவரின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது பற்றியும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. மூன்றாவது கட்டுரை செகோவ் பற்றியது செக்கோவ் ஏன் சிறுகதை உலகின் பிதாமகன் என்று ஏன் சொல்கிறார்கள் என்று அவரின் பச்சோந்தி கதை மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும் இதையே தான் எஸ் .ரா
அவர்களும் சொல்லி இருக்கிறார் இந்த கதை அதிகார வர்கத்தின் குரூர முகத்தை நகைச்சுவையுடன் காட்டும் கண்ணாடியை போன்றது . அது போல அவரின் 6 வார்டு கதையும் சமூக துயரத்தை காட்டும் கண்ணாடி தான். இப்படி பட்ட கதைகளை தான் செகோவ் அவர்கள் எழுதி உள்ளார் அதனால் தான் அவரை கொண்டாடுகிறோம் . டால்ஸ்டாய் ரஷிய இலக்கியத்தின் ஒரு பக்கம் என்றால் தஸ்தாயெவ்ஸ்கி இன்னொரு பக்கம் என்று சொல்லலாம் இந்த புத்தகத்தை பொறுத்த வரை அவரின் அசடன் நாவல் பற்றிய செய்திகளை அதிக அளவில் சொல்லி உள்ளார் தஸ்தாயெவ்ஸ்கி நாவல்கள் மனிதனின் மன போராட்டம் வாழ்வின் இருண்ட பக்கங்கள் பற்றியும் பேசுபவை வாழ்க்கை என்பது வெற்றி மட்டும் கிடையாது துயரமும் அதில் வாழும் மனிதர்களை பற்றிய வாழ்க்கையும் பேசுவது எனப்து தான் அவரின் சிறப்பு இந்த அசடன் நாவல் வரும் மிஷ்கின் அதே போல மனிதன் தான் அதனால் தான் இந்த நாவல் சிறப்பு மிக்க நாவலாக இருக்கிறது . இத தவிர அடுத்த ரெண்டு கட்டுரைகள் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி செய்திகளை சொல்கிறது .
அடுத்த உள்ள அணைத்து கட்டுரைகள் உலக புகழ் பெற்ற எழுத்தாளர்கள் ரொவால்ட் டால் , ஜோர்பா, தாகூர் ,ஷெல் சில்வர்ஸ்டைன் , பீட்டர் புரூக் , விர்ஜினியா வுல்ப் , போன்ற எழுத்தாளர்களை பற்றியும் சொல்லி இருக்கிறார் படிக்க வேண்டிய புத்தகம்.