ஒரு ஜிகிலோவுக்கும் காலத்தின் கட்டாயத்தால் விலைமகளான ஷர்மி என்பவளுக்கும் இடையே உருவான நட்பு,காதல், காமம், குற்றம் என பரபரப்பானநாவலாய் உருவாக்கியிருக்கிறார். கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டுமான புத்தகம்.
கேபிள்சங்கர் 15க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ள எழுத்தாளர். இரண்டு திரைப்படங்களின் இயக்குனர். நடிகர். விநியோகஸ்தர் என கலை சார்ந்த துறையில் பன்முகம் கொண்டவர். இவரின் முதல் நாவல் இது.
Kathir Rath –
நான் காலேஜ்ல படிச்சுட்டுருந்த நேரத்துல திடிர்னு ஒரு நாள் என் பிரண்ட்ஸ் ரெண்டு பேர் எங்கிட்ட தனியா பேசனும்னு தாங்க தங்கி இருந்த ஏரியாவ விட்டு வெளிய கூட்டி போனாங்க, எனக்கு என்னன்னு புரியலை, அப்புறம் ஒரு போன் நம்பர் கொடுத்து இது பாம்பே நம்பர். பேர் மாயா. இது மாதிரி தமிழ்நாடு சேலத்துல இருந்து பேசறோம். நாங்க உங்க நெட்வொர்க்ல சேர தயார்னு சொல்லி எப்படி என்னனு கேட்டு சொல்லு என்றார்கள்.
அதுக்கு என்னை ஏன்டா பேச சொல்றிங்கன்னு கேட்டதுக்கு அதான் சொன்னமே பாம்பேன்னு, இங்கிலிஸ்லதான் பேசுவாங்க, நீதான் நல்லா பேசுவியே… இந்த இடத்துல சிந்திக்கனும் மக்களே, என்னையவே இங்கிலிஸ் நல்லா பேசுவன்னு சொல்றாங்கன்னா அவங்க எந்த ரேஞ்சுல இருப்பாங்கன்னு…
நானும் தட்டு தடுமாறி பேசுனேன். அக்கவுண்ட்ல 5000 போட சொல்லி டீடெயில்ஸ் அனுப்புவாங்களாம். பணம் வந்தப்புறம் அவங்க நெட்ஒர்க் டீடெயில்ஸ் தருவாங்களாம். வாரம் ஒண்ணு அட்டெண்ட் பன்ற மாதிரி இருக்குமாம். பேசுனதுக்கு அப்புறம்தான் விவரமே சொல்றாங்க.
இது call boy service network மச்சி. இதுல சேர்ந்துட்டா இந்தியால இருக்க call boy தேவைப்படறவங்களுக்கு நம்ம காண்டாக்ட் போயிரும். அவங்களே நம்மளை கூப்பிடுவாங்க, அதே மாதிரி நம்ம பணம் கொடுக்கறதா இருந்தா நம்மளும் தேவைப்படறவங்களை கூப்பிட்டுக்கலாம்னாங்க… அடப்பாவிகளா ஏதோ தம்மு தண்ணின்னு இருந்தா அடுத்து இந்த வேலைக்குமாடா கோர்த்து விடறிங்கன்னு முதல்ல ஷாக்கானேன்.
கொஞ்சம் கொஞ்சமா பேசி மனசை மாத்த முயற்சி பண்ணாங்க. நான் நடுவுல நிப்பாட்டி
“எதுக்குடா இவ்வளவு பேசறிங்க, சேரனும்னு நினைச்சாலும் 5000 லாம் எங்கிட்ட இல்லை”
“எங்க்கிட்டயும் இல்லை”
“அப்புறம்?”
“இன்னும் 2 பேரை பிடிப்போம், ஆளுக்கு 1000 போட்டு ஒரு மெம்பர்ஷிப் வாங்கிட்டு அதை வச்சு வாரம் ஒருத்தர் போயிக்கலாம், எப்படி?”
“டேய் எச்சை சிகரெட்டை விட கேவலமா இருக்குடா, சரி 5000 போட்ட பிறகு ஏமாத்திட்டாங்கன்னா?”
“அதுக்கும் வாய்ப்பிருக்கு, மயிரை கட்டி மலைய இழுப்போம், என்ன சொல்ற?”
“நீங்களே உங்க மயிரை கட்டி இழுத்துக்கங்கடா” ன்னு கழண்டுகிட்டேன்.
அவங்களுக்கு நெருக்கமான நானே போகாதப்ப வேற யார் அவங்களை நம்பி பணம் தருவா? அந்த பிளான் அப்படியே டிராப் ஆகிருச்சு.
உண்மைலயே அது ஏமாத்து வேலை, MLM மாதிரி பணத்தை கட்டுன பிறகு காணாம போயிடற கேங்னுதான் அப்ப நினைச்சேன். ஏன்னா பசங்க பணம் கொடுத்தாலே கிடைக்காத விசயமா செக்ஸ் இருந்த காலகட்டம் அது. ஒரு பத்து வருசத்துக்கு முன்ன சொல்றேன். சோசியல் மீடியான்னு yahoo chat மட்டும் இருந்த காலகட்டம் அது.
ஆனா அடுத்தடுத்த காலகட்டத்துல அது மாதிரி இருக்காங்கறது உண்மைதான்னு புரிஞ்சுக்கிட்டேன். Call girls மாதிரி call boys. அப்ப கூட இது ஒரு அமைப்புசாரா தொழிலாகத்தான் தெரியும். அதாவது தனிப்பட்ட ஒருத்தன் தனக்கு தெரிஞ்ச பணம் இருக்க பெண்கள்கிட்ட போயிட்டு வந்து பணம் வாங்கிக்கறது. ஆனா இது கொஞ்சம் கொஞ்சமா. ஒரு organized sector ஆ இதுக்குன்னு ஒரு டீம், event manager னு இருக்குங்கறதுலாம் இப்ப கொஞ்ச வருசமாதான் தெரியும்.
சொல்லப்போனா இப்படிலாம் இருக்குன்னு சொன்னா இப்ப கூட இதை படிக்கற பலர் நம்ப மாட்டிங்க. சினிமால்ல காட்டற மாதிரி கணவனும் மனைவியும் ஒண்ணா ஒரு பார்ட்டிக்கு போய் வேற ஒரு ஜோடியோட எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்கற கலாச்சாரம்லாம் சென்னைக்கு வந்தாச்சுன்னா நம்புவிங்களா?
தாங்கிட்ட எவ்வளவு இருக்குன்னே தெரியாத அளவு பணம் இருக்கவங்க எந்தெந்த கட்டத்துக்கு போவாங்கங்கறதுலாம் மாச சம்பளம் வாங்கற, தன்னோட வருமானத்துகான வரியை தானே கணக்கு பார்த்து கட்டறவங்களுக்கு தெரியவே தெரியாது.
அது வேற ஒரு உலகம். அங்கே பணத்தை செலவளிச்சா என்ன வேணா கிடைக்குங்கறவளுக்கும் பணத்துக்காக என்ன வேணா செய்யலாங்கறவங்களுக்குமான உலகம்.
அந்த உலகத்துக்குள்ளதான் நம்மை கேபுள் சங்கர் கூட்டி போறார். பிளாக் எழுதுன எல்லாருக்கும் கேபுள் சங்கரை தெரியாம இருக்க வாய்ப்பே இல்லை. எல்லாரும் இவரை மாதிரி எழுதிடனும்னுதான் டார்கெட் வச்சு எழுதுவோம். நான் அவரோட புத்தகம் வாங்கறப்ப ஆட்டோகிராஃப் வாங்கிருக்கேன்.
எழுத்து, சினிமான்னு தொடர்ந்து சம்மா இயங்க முடியாம கொஞ்ச நாள் எழுத்துக்கு லீவ் கொடுத்திருந்தார். அதை நான் ரொம்ப மிஸ் பண்ணிருத்தேன் திரும்ப 2 புத்தகம் வெளியிட்டுருக்கார்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோசப்பட்டேன். நேத்து கிண்டில்ல இந்த புத்தகத்தை எடுத்து 2 மணி நேரத்துல முழுசா படிச்சுட்டுத்தான் கீழ வச்சேன்.
ஒரு புத்தகம் முழுக்க உங்களுக்கு புதுமையான உலகத்தை காட்டறப்ப அவ்வளவு சீக்கிரத்துல உங்களால கீழ வச்சுட முடியாது.
பாலியல் தொழிலாளிகள்னா புளிய மரத்தடில டார்ச் அடிக்கறவங்கன்னு மட்டும் நினைக்கறவங்க இந்த புத்தகத்தை படிச்சா மிரண்டுருவாங்க
அதே மாதிரி தமிழ்ல இலக்கியம்ங்கற பேர்ல காமத்தை திணிக்காம கதைக்களத்துக்கு ஏத்த மாதிரி முகம் சுளிக்காத வகைல கொடுக்கறதுக்குத்தான் இப்ப ஆளில்லை. அதை விட நேர்மையா புத்தகத்தோட அட்டைலயே A சான்றிதழ் போட்டுக்கறத பாராட்டியே ஆகனும்.
நான் எழுதுன சிறுகதைகள்ல அவரோட தாக்கத்தை என்னால தடுக்கவே முடியாது. அவரோட எல்லா படைப்புகளையும் நான் வாசிக்க சொல்லுவேன்.
இது அடல்ட் ஒன்லின்னு திரும்பவும் சொல்லிக்கறேன்.