புலிகளின் வீர வரலாறு, புலிகளின் துரோக வரலாறு இவையிரண்டுக்கும் இடையே தான் போராட்டத்தின் உண்மை வரலாறு இருக்க முடியும். ஆயிரக்கணக்கான கல்லறைகள் நிற்கும் இல்லங்களில் துயிலும் மாவீர்ர்கள் அனைவரையும் ‘துரோகிகள்’ என யாராலும் அடையாளப் படுத்திவிட முடியாது. ஒரு இயக்கத்தின் தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிட முடியாது. பயங்கரமான ஒரு யுத்தத்தில் நிற்க வேண்டிவந்த புலிப்படையணிகளை, சாதிய நிலவுடைமை சமூக மதிப்பீடுகளின் இறுகிய பிடிக்குள் உள்ள ஈழத்தில் இருந்து போர்முனைக்குச் சென்ற சூரியப் புதல்விகளான புலிகளின் பெண்கள் படையணிகளை, வெறும் ‘பயங்கரவாதிகள்’ எனப் புறந்தள்ளிவிட முடியாது.
Kathir Rath –
ஒரு கூர்வாளின் நிழலில்
தமிழினி
எழுத்தாளார் நாஞ்சில் நாடன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் வாசிப்பது என்றால் இயல்பாக உங்கள் வாழ்க்கைக்கு தொடர்பானதை மட்டும் வாசிப்பது வீண், வித்தியாசமான சூழலை கொண்டிருக்கும் களத்தினையுடைய நூல்களை வாசியுங்கள். உதாரணத்திற்கு ஷோபாசக்தியின் புத்தகங்கள், ஒரு கூர்வாளின் நிழலில், ஜோ.டி.குருஸ் புத்தகங்கள் போன்ற வெவ்வேறு நிலம் சார்ந்த நூல்களை வாசியுங்கள் என்று கூறியிருந்தார்.
தமிழ் பேசும் அனைவருக்கும் இலங்கை,விடுதலைப் புலிகள், மே 17, பிரபாகரன் என்ற வார்த்தைகள் வாழ்வோடு கலந்த ஒன்று இலங்கைத் தமிழர்கள், அவர்களது புரட்சி, யுத்தம் குறித்து தெரிகிறதோ இல்லையோ ஒரு இன அழிப்பு நடந்ததை அறிவார்கள்.
அதுவும் கலைஞரும் எம்ஜியாரும் வைகோவும் மாற்றி மாற்றி தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவாக மக்களிடம் நற்பெயரை வள்ர்த்து வைத்திருந்தார்கள். நம் நாட்டு பிரதர் இராஜிவ் காந்தியை கொன்றது புலிகள் என்றாலும் தமிழர்களில் புலிகளுக்கு எதிராக பேசுபவர் எவருமில்லாத அளவு இனப்பாசம் உண்டு. ஆனால் விடுதலைப் புலிகள் ஏன் தோற்றார்கள்?
1984ல் பற்றிய தமிழ் ஈழத்திற்கான போர், அதற்காக உருவாக்கப்பட்ட பல இயக்கங்கள், அனைத்தையும் கடந்து தனிப்பெரும் இயக்கமாக் விடுதலைப் புலிகள் எவ்வாறு வளார்ந்தது? சர்வதேச அள்வில் எவ்வாறு அங்கிகாரம் பெற்றது? இலங்கை தமிழர்களின் ஆதரவு புலிகள் இயக்கத்திற்கு மட்டும் எவ்வாறு நிரம்ப கிடைத்தது? சர்வதே தரத்திலான ஆயுதங்களை கொண்டிருந்தும் எவ்வாறு புலிகள் தோற்றனர்? இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது? போராளிகள் என்னவானார்கள்?
இது போன்ற நமக்கு தெரியாத பல கேள்விகளுக்கு இந்த நூலில் விடை கிடைக்க வாய்ப்புள்ளது.
1993ல் தனது பதின்ம வயதில் மாலை டியுசனுக்கு செல்கிறேன் என பெற்றோரிடம் சொல்லிவிட்டு இயக்கத்தில் சேர்ந்த தமிழினி, புலிகளின் மகளீர் அணி தலைவியாகி, தலைவர் பிரபாகரன் & இயக்கத்தின் சார்பாக ஊடகங்களில் பேசுமளவிற்கு பொறுப்பில் இருந்தவர். இறுதி யுத்தத்தில் புலிகள் தோற்ற பிறகு சரணடைந்து, சிறை வாழ்க்கையை கடந்து, புணர் முகாமில் ஒராண்டு இருந்ததற்கு பின் தனது வாழ்க்கை வரலாற்றை இந்த நூலில் எழுதி உள்ளார்.
அத்தியாயங்களின் பெயர்களை குறிப்பிடுகிறேன், நூலில் என்னென்ன இருக்கும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள இயலும்
பாதை திறந்தது
போருக்குள் பிறந்தேன்
ஆயுதப் பயிற்சி பெற்ற அரசியல் போராளி
தமிழ் மக்களும் ஆயுதப் போராட்டமும்
ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்
கிழக்கு மண்ணின் நினைவுகள்
உண்மையற்ற சமாதானமும் உருக்குலைந்த மக்கள் வாழ்வும்
நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுகிறோம்
சரணடைவும் சிறைச்சாலையும்
புணர்வாழ்வு
வனத்தில் இலங்கை ராணுவத்துடன் போராடும் பெண் போராளி ஒருவர் “இங்கே பாருடிம்மா, அடுத்த முறை வரப்ப எனக்கொரு நல்ல பேண்ட் கொண்டு வா” என தேய்ந்து நைந்து போன பேண்ட்டை காட்டுவது, அடுத்த முறை பேண்ட்டை கொண்டு வருவதற்குள் அவர் சுடப்பட்டு இறந்திருப்பது
தலையை நிமிர்ந்தால் சுடப்படும் நிலையில் தனக்கு அடியில் நெளிந்த நல்ல பாம்பை கையாண்டது
முதல் முறையாக பிரபாகரனை நேரில் சந்தித்து ஆயுதப் பயிற்சிக்கு அனுப்புங்கோள் அண்ணா என கூட்டமாக கோரசாக கேட்டது
தனக்கு மேல் பறந்து வந்த விமானம் குண்டு போடப்போவதை அறிந்து உடல் ஊனமில்லாமல் செத்து விட வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்வது
சொல்வதற்கு நிறைய இருக்கின்றன…
இது நம் இனத்தின் சமகால வரலாறு, கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.