வண்ணக்கழுத்து என்பது ஒரு புறாவின் பெயர். அந்தப் புறா விவரிக்கும் கதையின் பெயரும் அதுவேதான்.அச்சமின்றி, சுதந்தரமாக சிறகுகளை அகல விரித்துப் பறப்பது பறவைகளின் இயல்பு. ஆனால் இளம் வண்ணக்கழுத்துக்குப் பறப்பதென்றால் பயம். சுவாசிக்க பயம். வாழ்வதற்குமேகூட பயம்தான்.அப்பாவைப் புயல் கொண்டுபோய்விட்டது. அம்மாவை ஒரு பருந்து கொத்திச் சென்றுவிட்டது. எனில் நான் என்னாவேன்? என்னை யார் பாதுகாப்பார்கள்? இயற்கை இத்தனைக் கொடூரமானதாக ஏன் இருக்கவேண்டும்? ஒரு பாவமும் செய்திராத நான் இந்த அஞ்சத்தக்க சூழலில் எப்படி வாழப்போகிறேன்? அச்சத்தைத் துறந்துவிட்டு, இரண்டாம் உலகப் போரில் பங்கேற்று, குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்தது அதே புறா. அச்சத்தை, இயற்கையை, மனிதர்களை, போர்களை, உறவுகளை, உணர்வுகளை ஒரு பறவையின் கோணத்திலிருந்து புரிந்துகொள்ள முயலும் சிலிர்ப்பூட்டும் அனுபவம் இந்நூல்.எழுபதாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த Gay-Neck: The Story of a Pigeon என்னும் புகழ்பெற்ற நூலின் தமிழாக்கம். குழந்தைகளை இது குதூகலப்படுத்தும். மற்றவர்களுக்கு தனித்துவமான தரிசனங்களை அளிக்கும்.
Reviews
There are no reviews yet.