NETAJI PADAIYIL KARAIKAL THIYAAGIKAL
காரைக்கால் பகுதியில் வாழ்ந்த விடுதலைப் போராட்டத் தியாகிகள் எனில் அவர்கள் பொதுவாக, பிரெஞ்சிந்திய விடுதலைக்காகப் பாடுபட்டவர்களாகவே அமைகின்றனர். அவர்களில் ஒரு சிலரை மட்டுமே இந்திய விடுதலைக்காகச் சிறு பங்களிப்பைச் செய்தவர்களாகக் கொள்ள முடியும். 1947ஆம் ஆண்டுக்கு முன் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் விடுதலைப் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் காரைக்கால் பகுதி பிரெஞ்சுக்காரர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது. அதனால் ஆங்கிலேயர்களை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட போராட்டங்களில் ஈடுபட வேண்டிய அவசியம் பிரெஞ்சிந்தியப் பகுதியில் வாழ்ந்த காரைக்கால் மக்களுக்கு எழவில்லை. ஆகவே தான், இந்திய விடுதலை வேள்வியில் பங்கேற்ற தியாகிகளின் எண்ணிக்கை காரைக்காலில் வெகு குறைவாக இருக்க நேர்ந்தது. இருந்தாலும், நேதாஜியின் இந்திய தேசியப் படையில் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டவர்களை முற்றிலும் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டவர்களாகக் கொள்ள முடியும் என்ற எண்ணமே இந்நூல் வெளிவரக்காரணம்
Reviews
There are no reviews yet.