Veedu
தந்தையின் நிழலிலிருந்து விலகி, தன் வாழ்க்கையைத் துவங்கும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சொந்த வீட்டுக் கனவு இருக்கிறது. சிலர் கட்டுகிறார்கள்; சிலர் கட்டி வைத்திருப்பதை வாங்குகிறார்கள். பரபரப்பான வாழ்க்கைக்கு பகலில் தங்களைக் கொடுத்துவிடும் எல்லோரும், இரவில் நிம்மதி தேடி அடைக்கலம் புகுவது வீட்டில்தான்!
அந்த வீடு எப்போது நிம்மதி தரும்?
சக மனிதர்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து போயிருக்கும் இந்தக் காலத்தில், வில்லங்கம் இல்லாத ஒரு வீட்டையோ, மனையையோ வாங்குவது பெரும் சவாலாகவே இருக்கிறது. சொத்து பத்திரங்களில் எழுதியிருக்கும் சிக்கலான வார்த்தைகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இன்றைய தலைமுறைக்கு இல்லை. எது அங்கீகாரம் பெற்ற மனை, அங்கீகாரம் தரும் அதிகாரம் படைத்த அமைப்பு எது? எதை நம்பலாம்? எப்படிப்பட்ட மனையை, வீட்டை வாங்கலாம் என ஒரு சட்டநிபுணராக இருந்து இந்த நூல் வழிகாட்டும்.
அதோடு வீட்டுக்கடன் வாங்குவதில் இருக்கும் பின்னணி விஷயங்கள், அதன் சாதக, பாதகங்கள் என வீடு தொடர்பான அத்தனை விஷயங்களையும் எளிய தமிழில், இனிய நடையில் அனைவருக்கும் புரியும்படி விளக்கியிருப்பதே இந்த நூலின் சிறப்பு. ‘குங்குமம்’ வார இதழில் வெளியாகி, லட்சக்கணக்கான வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற தொடர், இப்போது நூல் வடிவம் பெறுகிறது. ‘கனவு இல்லம் கைகூடுமா’ என்ற ஏக்கத்தோடு இருக்கும் ஒவ்வொருவரும் வீடு வாங்குவதற்கு முன்பாக அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் இது!
Reviews
There are no reviews yet.