1 review for பாத்துமாவின் ஆடு
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
வேடிக்கைக் கதையாகச் சொல்லப்பட்ட குடும்பப் புராணம் ‘பாத்துமா வின் ஆடு’. ஆனால் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியவற்றில் பல அடுக்குகளில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய நாவலும் இதுதான். அன்பின் பெயரால் மையப்பாத்திரத்தைச் சுரண்டும் உறவுகளின் வலை, பெண்களின் உலகத்துக்குள் நிலவும் பூசல்களின் சிக்கல், மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான சார்புநிலை உறவு, வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான பிணைப்பின் வலு, நகைச்சுவையின் மிளிரல் என எந்த அடுக்கிலிருந்தும் இதை அணுகலாம். பஷீரின் இலக்கியத்தில் மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இடமுண்டு. மனிதர்களுக்கு இயற்கையின் உயிர்த்தரிப்புக் குணத்தையும் ஜீவராசிகளுக்கு மனித சுபாவத்தையும் வழங்குகிறது பஷீரின் படைப்பாளுமை. தன்னை மையமாக வைத்து வீட்டுக்குள் ஓர் உலகை உருவாக்குகிறார். அது உம்மிணி வலிய வீடு அல்லது மிகவும் சின்னப் பிரபஞ்சம். இது பஷீர் மட்டுமே உருவாக்கக்கூடிய கதா பிரபஞ்சம்.
Delivery: Items will be delivered within 2-7 days
Kathir Rath –
பாத்தும்மாவின் ஆடு
வைக்கம் முகம்மது பஷீர்
கதை இப்படி ஆரம்பிக்கறது
பொழுது விடிந்த கொஞ்ச நேரத்தில் வீட்டில் எல்லோரும் அவரவர் வேலைகளில் கவனமாக இருந்தார்கள். ஒரு ஆடு வீட்டிற்குள் நுழைந்தது, நேராக சமையலறைக்கு சென்றது, கஞ்சிப்பானையில் தலையை விட்டு குடித்து விட்டு வெளியே சென்று வாசலில் விழுந்து கிடந்த பலா இலைகளை சாப்பிட்டது, அதை தின்று முடித்தவுடன் வேற எதுவும் சாப்பிட கிடைக்குமா என தேடி பார்த்துவிட்டு என் அறைக்கு சென்றது, படித்து விட்டு வைத்திருந்த இரண்டு புத்தகங்களை எடுத்து ஒவ்வொரு பக்கமாக திருப்பி பார்த்து விட்டு கிழித்து சாப்பிட்டது.
அவை மிகவும் புரட்சிகரமான புத்தகங்கள், சாப்பிட்டு விட்டு என்ன புரட்சி செய்யும் என பார்த்தால் படிக்காத புத்தகங்களை எடுத்து கிழிக்க துவங்கியதும் ஓடி அதனிடமிருந்து புடுங்கினேன்.
“உம்மா, இது யாரோட ஆடு?”
“பாத்தும்மாவோடது”
பாத்தும்மா யார் என்று சொல்ல துவங்குகிறார். அப்படியே ஒவ்வொரு சம்பவங்களையும் அதில் வரும் பாத்தரங்களையும் சிறுவயது நினைவுகளையும் சொல்லிக் கொண்டே வருகிறார்.
பஷீரை போல ஒரு கதை சொல்லி கிடைத்தது மலையாள இலக்கியத்தின் பெரும்பாக்கியம். அதை உணர்ந்து தமிழில் அவர் எழுத்துகளை மொழிப்பெயர்க்க ஒவ்வொருவரும் போட்டி போட்ட கதை உண்டு.
எழுத்தாளர் சுரா பஷீரின் எழுத்துக்களை தமிழில் படித்துவிட்டு அதன் மூலத்தை படிக்க வேண்டும் என்பதற்காக்கவே மலையாளம் பயின்று, படித்து, மொழி பெயர்த்திருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
1930-40 களிலான கதைக்களம். கூட்டுக்குடும்பம். தம்பிகள், தங்கைகள், அவர்களின் பிள்ளைகள், ஆடு, கோழி, வருமானமற்ற வறுமை நிலை இவையனைத்துமே சொன்னாலும் நீங்கள் தனியாக யோசித்தால் மட்டும் உடர முடியும். மற்றபடி வாசிக்க துவங்கினால் பஷீர் பேசுவதை இடைமறிக்காமல் கடைசி வரை கேட்பதை தவிர வேறு வழியில்லை
என்ன மாதிரியான எழுத்து நடை, அதை இடையில் அவர. தம்பியே வந்து கேலி பண்ணுவதுதான் உச்சக்கட்டம்.
பஷீரின் அனைத்து எழுத்துக்களுமே கட்டாயம் வாசிக்கப்பட வேண்டியவை.