“அரசியலில் ஆன்மிகத்தைக் கலந்த பாவத்தை நான் தான் செய்தேன். அதற்கான தண்டனையை நான் தான் அனுபவிக்க வேண்டும்” என்று இறுதிக் காலத்தில் இதயம் நொந்து சொன்னார் காந்தி. அதற்கான தண்டனையை இரக்கமற்ற இதயம் கொடுத்தது. இந்து துன்பம் அனுபவித்தால் முஸ்லிம் வருத்தப்பட வேண்டும். முஸ்லிம் துன்பம் அனுபவித்தால் இந்து வருத்தப்பட வேண்டும் என்று சொன்னார். அப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்ப்பார்த்தார். அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. எது நடந்துவிடக்கூடாது என நினைத்தாரோ அதெல்லாம் வரிசையாக, வேகமாக நடந்தது. எல்லாவற்றையும் பேச்சுவார்த்தை, விவாதங்கள் மூலம் தீர்க்க நினைத்தவர் அவர். ஆனால் ரத்தகறை கொண்டவர்கள் மரணத்துக்குப் பிறகு நடத்த வேண்டிய அஞ்சலி கூட்டங்களிலேயே ஆர்வமாக இருந்தார்கள். அந்த வரலாறு இது.
இந்துஸ்தான், பாகிஸ்தான், ராமராஜ்யம் என்ற வார்த்தைகள் இந்திய அரசியலில் நேற்று ஏற்படுத்திய தாக்கத்தை காந்தியின் மூச்சுக்காற்று மூலமாக விவரிக்கும் நூல் இது.
Reviews
There are no reviews yet.