உலகம் இதுவரை காணாத பேரிதிகாசத்தை உருவாக்கிய கிருஷ்ண துவைபாயனர் என்ற இயற்பெயர் கொண்ட வியாசர், மகாபாரதத்தில் மனிதர்களின் அனைத்து முகங்களையும் – உள்முகங்களை – வரைந்து காட்டியுள்ளார். சகுனி ஒவ்வொரு முறையும் காயை உருட்டும்போதும், தருமன் தோற்றானா என்று பேராவலுடன் கேட்கிற திருதராஷ்டிரன் அவருடைய மகன். குலநாசத்துக்குக் காரணமாகிற துரியோதனனைத் தியாகம் செய், சிறைப்படுத்து, நாடு கடத்து என்று அறம் சொல்கிற விதுரனும் அவர் மகன். இருவரின் மேலும் அவருக்குப் பட்சமும் இல்லை. பாதகமும் இல்லை. அவர்கள் யாரோ, அவர்களின் உள்ளங்கை ரேகையோடு, அவர்களின் இதயம் எப்படித் துடிக்கிறதோ அதை அப்படியே சொல்வதே வியாச லட்சணம். இன்னும் ஆழ்ந்து போனால், இந்தக் கதை, இந்த மனிதர்கள், எல்லாமும் அவருக்கு வெறும் உபகரணங்கள்தான். அவரிடம் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளமும், தத்துவ ஞானமும், அவர் கட்டமைக்கும் தர்மங் களும், புறக்கணிக்கும் பழைமையும், புதுசாக உருவாக்கும் வாழ்க்கைத் தர்மங்களுமே நாம் நுணுகிக் கற்கத்தக்கவை.

மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
அரை நூற்றாண்டுக் கவிதைகள்
வெண்ணிலவு நீ எனக்கு
லாவண்யா
கடலும் மகனும்
ஆதி இந்தியர்கள் - Early Indians (Tamil)
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 8) ராஜீவ் - ராவ் காலம்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
புத்தர்பிரான்
காலந்தோறும் பிராமணியம் (பாகங்கள் 2 - 3) சுல்தான்கள் காலம் - முகலாயர்கள் காலம்
விடுதலைப் பதிவுகள்
ஆய்வும் தேடலும் 


Reviews
There are no reviews yet.