1801 – நாவல்
இந்திய சுதந்திர வரலாற்றில் விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருது பாண்டியர்கள், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால் நாய்க்கர், தீரன் சின்னமலை உள்ளிட்ட போராளிகளே.
தென்னிந்தியாவின் போராளிகளை ஒன்று திரட்டி மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1801-ஆம் ஆண்டு நடத்திய போராட்டமே இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமாகும். ஆங்கிலேயர்கள் மிக அதிகமான மனித இழப்புகளை சந்தித்ததும் இந்தப் போர்க்களத்தில்தான். இந்திய விடுதலைப் போராட்டக்காரர்கள் முதன்முதலில் நாடுகடத்தப்பட்டதும் இப்போரில் தான்.
உலகம் முழுக்க நடந்த விடுதலைப் போர்களின் விழுச்சிக்குப் பல காரணங்கள் இருந்துள்ளன. தென்னிந்திய விடுதலைப் புரட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாய் அமைந்தது சில தனி நபர்களின் துரோகம் மட்டுமே. சில நூறு பணங்கள், சிறு துண்டு நிலம், ஆசை வார்த்தைகள், அதிகாரத்தில் பங்கு, ஆட்சியில் பங்கு என ஆங்கிலேயர்கள் விரித்த வலையில் விழுந்து துரோகிகளாக மாற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.
முதல் இந்திய சுந்தந்திரப் போரின் எழுச்சி, வீழ்ச்சி, 18 – ஆம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கை, பிரிட்டிஷ் இந்தியக் கால தமிழகம், ஆங்கிலேயர்களின் இந்திய வாழ்க்கை எனப் பல்வேறு கதைக்களன்கள் விவரிக்கப்பட்ட நாவலே ’1801.

திராவிட இயக்கத்தின் பெண்விடுதலை
இது கறுப்பர்களின் காலம்
இண்டமுள்ளு
இந்திய அரசியல் சட்டம் - முதல் திருத்தம் ஏன்? எதற்காக?
பகிரங்கக் கடிதங்கள்
வளமாக்கும் பொழுதுபோக்கு
அப்பனின் கைகளால் அடிப்பவன்
உள்பரிமாணங்கள்
தாம்பூலம் முதல் திருமணம் வரை
ஆதி இந்தியர்கள் - Early Indians (Tamil)
மாயமான்
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி -1)
போர் இல்லாத இருபது நாட்கள்
உலகைப் புரட்டும் நெம்புகோல்
ஆ'னா ஆ'வன்னா
அகிலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு
அவளது வீடு
அஞர்
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்
இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்
இராமாயணப் பாத்திரங்கள்
கறுப்புக் குதிரை
எம்.ஜீ.ஆர்
வாழும் நல்லிணக்கம் - அறியப்படாத இந்தியாவைத் தேடி ஒரு பயணம்
சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர்
குடுமி பற்றிய சிந்தனைகள்
சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
சரித்திரம் படைத்த இந்தியர்கள்
தூது நீ சொல்லிவாராய்..
கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்
பிரக்சிட்
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
நிழலைத் துரத்துகிறவன்
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
நயனக்கொள்ளை
வாராணசி
சாலா - நெல்லை வட்டார வழக்குச் சிறுகதைத் தொகுப்பு
வால்காவிலிருந்து கங்கை வரை
ஆடு ஜீவிதம்
முதலியார் ஓலைகள்
பெரியார் ஒரு சகாப்தம் ஏன்? எப்படி?
ஊரெல்லாம் சிவமணம்
யார் கைகளில் இந்து ஆலயங்கள்?
திராவிட இந்தியா
யோகநித்திரை அல்லது அறிதுயில்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
சார்வாகன் கதைகள்
சூரிய வம்சம்
மரண வீட்டின் முகவரி
ஆதிகைலாச யாத்திரை
எதுவாக இருக்கும்?
நல்லதாக நாலு வார்த்தை
சர்வதேசத் திரைப்படங்கள் (பாகம் - 1)
கொலசாமியும் கோனிகா மினோல்ட்டாவும்
கண்ணாடிக் குமிழ்கள்
வானவில்லின் எட்டாவது நிறம்
வா தமிழா! பொருளாதாரம் பயில்வோம்...
குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு மூலமும் உரையும்
பூப்பறிக்க வருகிறோம்
வண்ணக்கழுத்து
மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர்
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி – 10)
கள்ளிக்காட்டு இதிகாசம்
உச்சக்கட்டம்: உண்மைகளும் தீர்வுகளும்
மறைக்கும் மாயநந்தி
வாழ்வியல் நெறிகள்
வந்ததும் வாழ்வதும்
கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்
மாக்பெத்
இந்திய இலங்கை உறவும் சங்கத் தமிழகமும்
இறவான்
இறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர்
நாங்கூழ்
சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்
மங்கலதேவி
நடிப்புச் சுரங்கமான நடிகர் திலகம்
எருமை மறம்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேசுகிறார்
வாசிப்பது எப்படி?
அவனி சுந்தரி
அடியும் முடியும்
மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
வனம் திரும்புதல்
மீள் வருகை
மலர் மஞ்சம்
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
உலகை ஆளும் மந்திரம்
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள் 
Kmkarthi kn –
1801
மு.ராஜேந்திரன்.இ.ஆ.ப
அகநி வெளியீடு.
சென்ற ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்கான போட்டியில் சூல் நாவலுக்கும் இந்த 1801 எனும் நாவலுக்கும் இடையே பலத்த போட்டியிருந்தது என்ற செய்தியின் காரணமாக ஈர்க்கப்பட்டே இந்த புத்தகத்தை வாங்கினேன். இந்த புத்தகத்தை வாசிக்க கையில் எடுக்கும் வரையிலுமே இந்த புத்தகம் எதைப்பற்றியது என அறியாதவனாகவே இருந்தேன். அதனாலயே இதை வாசிக்க இத்தனை தாமதமாகிவிட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிடுவதிலிருந்து நாவல் ஆரம்பமாகிறது. அப்போதே நாவலின் போக்கை நமக்கு தெளிவாக உரைத்துவிடுகிறார். 1801 ம் ஆண்டு சிவகங்கைச் சீமையில் காளையார் கோயில் காட்டுக்குள் மருது சகோதரர்களுக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை நோக்கித்தான் நாவல் நகரும் என தெளிவான பாதையை வாசகருக்குக் கடத்துவதோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அதற்கான சொக்குப்பொடியை தூவிக்கொண்டே செல்வது தான் சிறப்பு.
இந்திய வரலாற்றில் முதல் சுதந்திரப்போர் என்றால் அது காளையார் கோவில் காட்டுக்குள் 1801ல்நடந்த போர் தான் என்கிறார். 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தில் மக்கள் பங்குபெறவில்லை, ஆனால் இந்தப் போரில் சிவகங்கைச் சீமையின் மொத்த மக்களும் பங்கு கொண்டனர் என்கிறார். அதற்கு ஆதாரமாக போர் முடிந்தவுடன் ஊரின் அனைத்து மக்களிடமும் இருக்கும் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, இனிமேல் எந்த புரட்சியிலும் ஈடுபடமாட்டேன் என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக ஒப்பந்தம் போடப்பட்டதையும் குறிப்பிடுகிறார்.
நாங்குநேரி முதல் பூனே வரை உள்ள புரட்சியாளர்களை ஒருங்கிணைத்து கம்பெனிக்கு எதிராக சின்னமருது போர் புரிந்த சம்பவத்தையும் அதற்கு சான்றாகச் சொல்கிறார். இந்த நிகழ்வுக்கு முன் இத்தனை பெரிய ஒருங்கிணைந்த போர் கம்பெனிக்கு எதிராக நடந்ததில்லை என்பதும் வரலாறு. அதுபோக போர்ப்பிரகடணம் ஒன்றையும் சின்ன மருது தயாரித்திருக்கிறார். அதாவது தாங்கள் எதற்காக போர் புரிகிறோம், தங்களின் நோக்கம் என்ன என்பதை தெளிவாக சுவரொட்டிகளின் மூலம் மக்களுக்கும் கம்பெனிக்கும் தெளிவுபடுத்தியிருக்கிறார். இந்த நிகழ்வுகளையெல்லாம் ஆதாரங்களாகக் காட்டி இது தான் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என முரசு கொட்டுகிறார்.
வரலாறுனா வெறும் பாடபுத்தக வரலாறு மட்டுமே தெரிந்த என்னைப்போன்ற தற்குறிகளுக்கு இதன் தகவல்கள் ஒவ்வொன்றும் வைடூரியங்கள்.
1800 – 1801 ம் ஆண்டுகளுடைய நிகழ்வுகளை மட்டும் தொகுக்காமல் அந்த நிகழ்வுக்கு எதுவெல்லாம் காரணமாயிருந்தது என ஆற்காடு நாவப்பிலிருந்து துவங்கி கௌரி வல்லபர் வரை எந்த ஒரு சின்ன நிகழ்வையும் விட்டுவிடக்கூடாது என்ற ஆசிரியரின் அக்கறை ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது.
ஆற்காடு நவாப், ஹைதர் அலி, திப்பு சுல்தான், பூலித்தேவன், கட்டபொம்மன், ஊமைத்துரை, வேலுநாச்சியார், ராமநாதபுரம் சேதுபதி, விருப்பாட்சி கோபால் நாயக்கர், திருவிதாங்கூர் சமஸ்தானம், துத்தாஜி வாக் என நாவலில் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் வரலாறையும் கொண்டுவந்து மருதுபாண்டியர்களின் வாழ்க்கையோடு இணைக்கிறார். அதுவும் காவல் கோட்டம் படித்த கையோடு இதைப் படித்தால் அதன் நீட்சியாக இதை உணர்வீர்கள்.
காவல் கோட்டம் நாவலில் விஜயநகரப் பேரரசின் குரல்வளை எவ்வாறு நெரிக்கப்பட்டது என்பதைச் சொல்வதாகக் கொண்டால், இந்த 1801 நாவலில் நெரிக்கப்பட்ட குரல்வளையின் கடைசி சுவாசத்தை பதிவு செய்திருக்கிறது என்று கொள்ளலாம்.
இந்த நாவல்ல ஒரு வரி இப்படி வரும் கம்பெனி தன் படையில் வீரர்களை உருவாக்குவதை விட எதிரிகளின் படையில் துரோகிகளை விரைவிலேயே உருவாக்கி விடுகிறார்கள் என்று, அது எத்தனை பொருத்தமான வார்த்தை என்பதை வரலாறு இன்றுவரை சொல்லிக்கொண்டே இருக்கிறது. இந்த நாவலின் சில பகுதிகளோடு எனக்கு முரண்பாடுகள் இருந்தாலும் அதை புனைவு எனக் கருதி பெரிதுபடுத்தாமலும், வரலாறை முக்கியத்துவப்படுத்த எண்ணியும் சில தவறுகளையும், பிழைகளையும் சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன்.
கண்டிப்பாக தமிழர்கள் ஒவ்வொரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வரலாறு என்பதால் கட்டாயம் நாவலை வாசிக்க முயற்சி செய்யுங்கள். வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே..
#Kmkarthikeyan_2020-57