Andaman Nayakkar
ஒரு குற்றமும் அறியாத விவசாயி ஒருத்தனை சுதந்திர இந்தியாவின் போலீஸ் அடித்தே கொன்றுபோடும் கதைதான் இது. இருபதுகளில் வடநாட்டில் பர்தோலி கிராமத்தில் வல்லபாய் படேலின் தலைமையில் நிலவரி கொடா இயக்கம் நடந்தது. மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் நடந்த அந்தப் போராட்டத்தின் அலை நாடு பூராவுமே வீசியடித்தது.
வெள்ளை அரசை எதிர்த்து நடந்த கொடிப் போராட்டத்தின் போது ஒரு கரிசல் கிராமத்தில் விளையாட்டுப் போல ஒரு இளைஞன் மூவர்ணக் கொடியை மரத்தில் ஏறிக் கட்டிவிடுகிறான். அதன் பிறகு நடந்ததைச் சொல்லுகிறது கதை.
Seethalakshmi –
#வாசிப்பை நேசிப்போம்
#வாசிப்பு மாரத்தான்
#ID No:00184
#22/100
#கி.ரா.வாசிப்பு போட்டி
புத்தகம்: அந்தமான் நாயக்கர்
ஆசிரியர்: கி.ராஜநாராயணண்
விலை: 110/-
பக்கங்கள்: 109
சிறு வயதிலிருந்தே தாத்தா என்ற ஒரு நபரின் அருகாமையை இழந்திருக்கிறேன். அந்த கவலை
இன்னுமும் குறையவில்லை ஆனால் இந்த புத்தகம் படித்த நேரத்தில் அதை நான்
இழக்கவில்லை என்று தோன்றியது.
வாசிப்பை நேசிப்போம் போட்டியில் கலந்துகொண்டவுடன் இந்த பகுதி நாம் குறிப்பிடவேண்டும்
இது சொல்லவேண்டும் என்று எழுத்துக்கள் முந்தும். சில புத்தகங்கள் வார்த்தைகளற்று நின்று விடும்
ஆனால் கி.ரா. அவர்களின் வாசிப்பில் முதல் புத்தகம் என்று தோன்றவில்லை. ஏற்கனவே நீண்ட
நாள் உடனிருந்து பேசிய அனுபவம்
2நாட்களில் வீட்டில் எல்லா இடங்களிலும் சமயலறையில் கூட கிடைத்த நேரத்தில் படித்துக்
கொண்டிருந்தேன். என்னைப் பொறுத்தவரை உயிரில்லாத ஒரு பொருள் உயிர்ப்பாக மாற்றக்கூடியது
வார்த்தைகளின் மூலம் அர்த்தத்தை கடந்த ஒரு உணர்வு. எதனுடனும் ஒப்பிடாத ஒரு நெகிழ்வு,
மலர்ச்சி. எல்லா வார்த்தைகளுக்கும் கற்பனையில் உருவம் வந்துவிடும். ஆனால் உணர்வதற்கு
உருவம் தேவையில்லை.
சரி புத்தகத்திற்கு வந்துவிடலாம். அந்தமான் நாயக்கர் முக்கிய கதையின் நாயகன்,
இரண்டு மூன்று தடவை மட்டுமே வரும் நாயகனின் காதலி வெங்கட்டம்மா, எந்த குற்றமும்
செய்யாத விவசாயியை போலீசார் அடித்து கொன்ற ஒரு விவசாயியின் கதைதான்
அந்தமான் நாயக்கர் (நிஜப்பெயர் அழகிரி) என்பதின் பெயர்க்காரணம். மூவர்ணக் கோடியை கையில்
வைத்திருந்தாலே சட்ட விரோதமாக இருந்த காலகட்டத்தில் ஒரு இரவில் ஊர்க்கரையில்
கொடியை கட்டி வைத்த அழகிரியை சர்காரிடம் மாட்டிக்கொடுக்கிறார் மணியம் நாயக்கர்
40ஆண்டுகள் அந்தமான் தீவில் கைதியாகி அந்தமான் நாயக்கர் என்கிற பெயரோடு திரும்பி
வருகிறார். ஊருக்கு வந்து பார்த்தால் தனது குடும்பம் காதலி (ஒரு தலைக்காதல்)
எல்லோரையும் இழந்ததை நினைத்து அழுது மனம் நொந்து இருக்கிறார். சிறையில்
இருந்த காலத்திலும், போலீசாரிடம் அடிவாங்கியபோதும் பசுமையுடன் வெங்கட்டம்மாளை
நினைவு கொள்கிறார்.
அந்தமான் சிறையில் நடந்த கொடுமைகளை கூறும்போது உடல் சில்லிடுகிறது. தினமும் நடக்கும்
அடியை “பூசைக்காப்பு” என்கின்றனர். இந்த தண்டனைக்கு என்ன காரணம் மணியம்
நாயக்கருக்காக குடும்பத்துடன் விசுவாசத்துடன் உழைத்ததை தவிர வேறு என்ன
செய்தோம்?
ஆசிரியர் அலசாத விஷயங்களே இல்லை உறவுகள், விவசாயம், அரசாங்க கெடுபிடி
அன்றைய காலத்தில் உள்ள மக்களின் பிரச்சனைகள் பெண்களின் மனம் என
எல்லாவற்றையும் குறிப்பிடுகிறார்.
—-அருகு என்பது அருகம்புல்லை அதிகம் வளரவிடக்கூடாது நாயகர் தன்னுடைய 1.5
ஏக்கர் நிலத்தை சீர்திருத்தி விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறார்
—-வெள்ளைக்காரரனைப் போலவே அருகும் கொஞ்சம் விட்டால் போதும் ஆளை
முழுங்கிவிடும். அந்தமான் நாயக்கர் பல்ராம் நாயக்கர் இருவரும் சேர்ந்து
நிலத்தை சீர் செய்யத்தொடங்கினர்.
—இருவரும் மாமன் மாப்பிள்ளை உறவு. பல்ராம் நாயக்கர் .அவர்கள் கதைசொல்லி .
பல கதைகளின் மூலம் நீதியை மக்களுக்கு சொல்லிவருபர்.
மாப்பிள்ளை அந்தமான் நாயக்கருக்கு கதையை ஆரம்பிக்கிறார் பல்ராம் நாயக்கர்
—- வேலைத் தளங்களிலி நீண்ட கதைகளை ஒரே நேரத்தில் சொல்லி முடிக்க இயலாது
பொழுதுபோக்காக கொஞ்சமாக தினமும் கொஞ்சமாகவே சொல்லுவார்கள் கதை
சொல்லிகள் — ஆசிரியரின் வரிகள்
—அவர் சொல்லியது நம்பிக்கை துரோகம் என்பது யாருக்கும் தெரியாமல் கூட செய்துவிடக் கூடாது
என்று கூறும் விரலக்காவின் கதை
—-அக்காள் தங்கை இருவர் அக்காவுக்கு உடல் நலம் இல்லாததனால் அக்காவின் கணவர்
பக்கத்துக்கு ஊரில் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்.தங்கை அக்காவின்
உடல் நலத்தை தேற்றி வைக்கிறார்
—-தற்செயலாக வந்த திரும்பி கணவர் மூலமாக தாயாகிறாள் மூத்தவள். குழந்தை
பிறந்தவுடன் மூத்தவள் இறந்து விடுகிறாள். தாய்க்கு தாயாக கண்ணுக்கு கண்ணாக
குழந்தையை வளர்த்து ஆளாக்குகிறாள் தங்கை விரலக்கா(இந்த பெயர்க்காரணம் துணை கதை)
—குழந்தை பிறக்காமலும் ஒரு பெண்ணால் குழந்தைக்கு பால் கொடுக்க முடியும் என்பதை பல
மருத்துவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அதை ஆசிரியர் ஒரு வரியில்
கூறும்போது மெய் சிலிர்த்துப் போனேன். பெண்மை என்பது மாதவம் தான்
—வளர்த்த மகனுக்கு கலியாணம் செய்து அழகு பார்க்கிறாள். வந்த மருமகள் ராட்சசி
கஞ்சி கூட கொடுக்காமல் துரத்துகிறாள்.
—தற்கொலை செய்து கொள்கிறாள் விரலக்கா. வந்து பார்த்த மகன் அவளுக்கான
மரியாதையை செய்யாமல் திரும்பி ஓடுகிறான்
—அவனுக்கு இருந்த குழந்தைகளையும் இரண்டாம் தாரம் கல்யாணம் செய்து
பெற்ற குழந்தையையும் எப்படி இழக்கிறான் மகன் என்பதுதான் விரலக்காவின் கதை
—எனக்கு மிகவும் பிடித்தது திருநெல்வேலிதமிழ். என் மாமியார் ஊர். இந்த புத்தகத்தில்
சில இடங்களில் வந்த பானக்கரம் (பானகம்), பச்சரிசி நெல்லுச்சோறு, கேப்பை கஞ்சி,
பணியாரம்…. மோர், பலகாரங்கள், செவல்க்காட்டு சீனிக்கிழங்கு, கைக்குத்தல் வரகு
நவ்வாப்பளம் என்று பாரம்பரிய உணவின் தகவல்கள்
— முதல் பக்கத்திலேயே “வெள்ளைக்காரன் எதோ ஒரு உருவத்தில் இங்கு
இருக்கவே செய்கிறான்” என்பதில் இருந்து படிப்படியாக எப்படி மாறியிருக்கிறது
என்பதை அடிக்கடி கூறிக்கொண்டே இருக்கிறார்
—-சுதந்திரம் கிடைத்ததும் ஏன் அந்தமான் நாயக்கர் என் விடுதலை செய்யப்படவில்லை
சுதந்திரக் கொடி பறந்ததை பார்த்து நானும் இதையேதானே செய்தேன் இன்னும்
ஏன் விடுதலை ஆகவில்லை எனும் போது நம்முள்ளும் சோகம் தொற்றிக் கொள்கிறது
—சில கேள்விகளுக்கு விடை தெரிவதில்லை ஏன் மலைகளைக் குடைந்து ரயில்
பாதை அமைக்க வேண்டும். அவசியம் என்ன? இதை அமைக்கும் போது
அதைக் காண தொலைதூரத்திலிருந்து மக்கள் கட்டுசோறு கட்டிக்கொண்டு வந்து
பார்த்தார்கள் ஏன்?
— கட்டிடத்துறையில் வெள்ளைக்காரன் கொண்டுவந்த பல்க்கம்பி
—விதை பருத்தி வாங்க வெளியூருக்கு செல்லவேண்டிய அவலம்
பழமொழிகள்:
கார்த்திகை மாசம் கழுத்தாம் பிடி,
ஏகாதசித்தோசையும் இளவடியாள் மாகையும்,
அழுதுகொண்டே இருந்தாலும் உழுது கொண்டே இரு
போட்டுவைத்தால் தின்கிறது ஏத்திவிட்டால் சுமக்கிறது
—பட்டப்பெயர்கள்
விரலக்கா, உழவு ரொட்டி, பொம்பள வண்டி, கோட்டிக்கார பயல்
—காட்டுல விளையுது வெள்ளரிக்கா அதெ என்ன விலைக்கு வித்தா இவனுக்கென்ன.
காசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்
நம்மாழ்வார் ஐயா இதை படித்து கூறியிருக்கிறார்
—வெள்ளைக்காரன் நாம நல்மிளகை வாங்கத்தான் வந்தானாம். அப்போ
இந்த மிளகாய்வத்தல் நம்ப நாட்டுல கிடையாது. நமக ஒனக்கு இந்த நல்மிளகைக்
கொடுத்துட்டு காரத்துக்கு எங்க போவோம்டான்னு இவங்க கேட்டிருக்காங்க.
காரந்தானலே வேணும் ஒங்களுக்குன்னுட்டு அவன் கொண்டாந்து தந்துதான்
மிளகாவத்தல்.
—-இந்த கோட்டிக்கார பயலுக நல்மிளகை அவங்ககிட்ட தந்துட்டு வத்தலை
வாங்கி வச்சிக்கிட்டு வாய ஈசு ஈசு மென்னிட்டிருக்காம் —
—உலகத்திலேயே தரமான நீண்ட பருத்தி விளையும் இடம் எகிப்து அதுவும் கரிசல் மண்தான்
—உலகப்போரில் மீதியான மருந்துகளை ரசாயன உரங்களாக்கி இன்றும் விக்கிறதை
கூறுகிறார் ஆசிரியர்
—அனுபவ உரை எழுத இன்னும் பல விஷங்கள் உண்டு
—கடைசியில் போலீசின் கையால் அடிவாங்கி இறந்து போகிற கதாநாயகனின் கண்களுக்கு
தெரிவது உணர்வது வெங்கடம்மாவின் நினைவும் மூவர்ணக்கொடியின் நினைவும் தான்
—அந்தமான் நாயக்கர் மட்டுமல்ல நாட்டின் நாயர்களான விவசயிகளுக்கு இன்றளவும்
நியாயம் கிடைக்கவில்லை. கண்ணீரே மிஞ்சுகிறது.
—தமிழ் அகராதியில் சில சொற்களுக்கு விடை தேடி எடுத்தேன்
—இது போன்றதொரு வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் நன்றி
—திருமணம் ஆன புதிதில் மாமியார் சொளவு எடு, பல்லாரியை எடு, அவிச்சு எடு
என்று கூறினால் பேந்த பேந்த முழித்திருக்கிறேன். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த
இந்த வட்டார வழக்கு ரத்தத்தில் கலந்துவிட்டது
—நன்றி