Androru Naal Idhe Nilavil
நமக்குச் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை அவர்களின் வாழ்க்கையைப் போன்ற எளிய மொழியில் எழுதியுள்ளார் பாரததேவி. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஞாயிறு இணைப்பான ‘பெண் இன்று’வில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். திருமணம், மறுவீடு, மாப்பிள்ளை விருந்து, பிள்ளைப்பேறு, மருத்துவம், திருவிழாக்கள், விவசாயம், உணவு, கட்டுப்பாடுகள் என கிராமத்து வாழ்க்கையின் ஒவ்வோர் அங்கத்தையும் சுவாரசியமாக எழுதியுள்ளார். பெரும்பாலான கட்டுரைகளின் ஆதாரமாகப் பெண்களே இருக்கிறார்கள். காரணம், கிராமத்து வாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பு இல்லாமல் எதுவுமே நிறைவடைவதில்லை. அவர்களே ஆகச் சிறந்த விவசாயிகளாகவும் உழைப்பாளிகளாகவும் குடும்ப நிர்வாகிகளாகவும் இருக்கிறார்கள். ஆண்களுக்குப் புரிபடாத அறிவும் திறமையும் கைகூடியவர்களாகப் பெண்களே இருக்கிறார்கள் என்பதை பாரததேவியின் கட்டுரைகள் உணர்த்துகின்றன.

மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
திராவிடத்தால் எழுந்தோம்!
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்? 
Reviews
There are no reviews yet.