Arintha aalayangal apoorva thagavalgal
அன்று முக்கியமான ஒரு திருநாள்… ‘இந்த விசேஷ தினத்தில் கோயிலுக்குப் போய்க் கொஞ்சம் புண்ணியம் தேடிக் கொள்ளலாம்’ என்று விரும்பிய அந்தத் தம்பதி, தங்களின் பத்து வயது மகனுடன், அருகில் உள்ள ஒரு கோயிலுக்குப் போனார்கள். கோயிலில் எக்கச்சக்க கூட்டம். கடவுளை தரிசித்து அவரின் அருள் பெற வேண்டி வந்த கணவன், வந்த வேலையை மறந்து, கோயிலின் ஒரு மூலையில் அமர்ந்திருந்திருந்த ‘திடீர்’ ஜோசியக்காரரை அணுகி, ‘ஐயா… சொந்த வீடு நான் எப்ப வாங்குவேன்?’ என்று கேட்டான். அவரும் குத்துமதிப்பாக ஒரு காலநேரத்தைச் சொல்லி, கணிசமான பணத்தைக் கறந்து அனுப்பினார். விதம் விதமான புடவைகள் மற்றும் நகை அணிந்து கோயிலுக்கு வந்திருந்த மற்ற பெண்மணிகளைக் கண்டதும், மனைவியாகப்பட்டவள் மதி மயங்கினாள். சாமியைத் தரிசிக்கும் எண்ணத்தை மறந்தாள். ‘இவ புடவை நல்லாருக்கே… அவளோட நகை ஜொலிக்குதே…’ என்று ஒவ்வொன்றையும் ரசிக்க ஆரம்பித்து விட்டாள். தெய்வ சந்நிதிகளை அவள் தரிசிக்கவில்லை. இறை பக்தியில் நாட்டம் செல்லவிலை. அவர்களின் பத்து வயது மகன் மூலவர் சந்நிதிக்கு முன் சென்று பயபக்தியோடு நின்றான். ‘என் பெற்றோர் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்தக் கஷ்டமும் வரக் கூடாது. நான் நன்றாகப் படித்து முடித்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று மனமுருக வேண்டினான். & இந்த மூவரில் உண்மையான பக்தி யாருக்கு இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும். பக்திக்குப் பணிவு தேவை; பகட்டு கூடாது. ஏனோ தெரியவில்லை, இறை பக்தியைத் தேடிச் செல்லும் ஆலயங்களில், முழு ஈடுபாடு காட்ட மறக்கிறோம். புண்ணியத்தைப் பெருக்கிக் கொள்ள மறுக்கிறோம். வேறு விஷயங்களில் சிந்தனையைச் சிதற விட்டு விடுகிறோம். ஒரு கோயில் என்று எடுத்துக் கொண்டால், உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் அங்கே கிடைக்கும். ஆலயங்களில் புதைந்துள்ள அற்புதங்களும், அவை சொல்லும் அதிசயங்களும் ஏராளம். ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒவ்வொரு புராணம் இருக்கிறது. சிறப்பு இருக்கிறது. மகத்துவம் இருக்கிறது. அவற்றை எல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பலன் பெற வேண்டும். ஓர் ஆலயத்தைத் தரிசிக்கச் செல்லும் முன் அந்த ஆலயம் பற்றிய முழு விவரங்களையும் நம் விரல் நுனியில் வைத்திருந்தால், விளக்கங்கள் கேட்டு எவரிடமும் செல்ல வேண்டாம். உங்கள் கைகளில் தவழும் ‘அறிந்த ஆலயங்கள், அபூர்வ தகவல்கள்’ என்ற இந்தப் புத்தகம் ஓர் உன்னதமான தொகுப்பு. பிரபலமான ஒவ்வொரு ஆலயத்தைப் பற்றியும் வாசகர்கள் எழுதி அனுப்பிய செய்திகளை, அலசி ஆராய்ந்து அதை அழகான கட்டுரையாகத் தொகுத்து சக்தி விகடன் இதழ் தொடர்ந்து வெளியிட்டது. விகடன் பிரசுரமாக இப்போது மலர்ந்திருக்கும் இந்தத் தொகுப்பு, அந்தந்த ஆலயம் குறித்த பயனுள்ள கையேடு. படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய தகவல் களஞ்சியம்.

பெரியாரியல் பாடங்கள் (தொகுதி – 4)
மரபும் புதுமையும் பித்தமும்
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
நாட்டுப்புற கலைகள்
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
நவபாஷாணன்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
சப்தங்கள்
அறமும் அரசியலும்
குத்தூசி குருசாமியின் சிறுகதைகள்
கிராமத்து பழமொழிகள்
சக்கிலியர் வரலாறு
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
புனிதாவின் பொய்கள்
பழங்காலத் தமிழர் வாணிகம்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
சாவுக்கே சவால்
கிருமிகள் உலகில் மனிதர்கள்
பொன் மகள் வந்தாள்
கனவைத் துரத்தும் கலைஞன்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
பிஜேபி ஒரு பேரபாயம்
சமஸ்கிருத ஆதிக்கம்
மத்தவிலாசப் பிரகசனம்
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
சிவ ஸ்தலங்கள் 108
அகம்
உலகிற்கு சீனா ஏன் தேவை
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
புனைவும் நினைவும்
மேடையில் பேச வேண்டுமா?
கிரா என்றொரு கீதாரி
சந்திரகிரி ஆற்றங்கரையில்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
காலங்களில் அது வசந்தம்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
'ஷ்' இன் ஒலி
சாதனையை நோக்கிய பயணம்
சன்னத்தூறல் 
Reviews
There are no reviews yet.