பிரிட்டிஸ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்
ஆலிவர் ஹெம்பர்
தமிழில்: நாஞ்சிலான்
==============================================
சதித்திட்டங்களைத் தெரிந்துகொள்வது காலம் காலமாய் மனிதர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய விஷயம். அதனால்தான் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஏறக்குறைய அனைவருமே சதிக்கொள்கை மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் காமன்வெல்த் (பொதுநல) அமைச்சகம் உலகம் முழுவதும் தனது காலனியை ஏற்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் நன்கு பயிற்றுவித்து உளவாளிகளாக அனுப்புகிறது. அவர்களில் ஒருவர்தான் ஆலிவர் ஹெம்பர்.
அவர் அரபு நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் தமக்கு அளிக்கப்பட்ட பணியை எவ்வாறு மேற்கொண்டார் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக இந்நூலில் பதிவு செய்கிறார்.
இதை அரசியலாலும் பண்பாட்டாலும் உலகளாவிய அளவில் விரைந்து ஐக்கியப்படும் சமூகங்களைக் கண்டறிவதில் தொடங்கி, அச்சமூகத்தின் நம்பிக்கையிலும் பண்பாட்டிலும் வஹாபியிஸம், ஷியா, சன்னி, சூஃபியிஸம், எனப் பல புதிய பிரிவுகளை ஏற்படுத்தி, தாம் எவ்வாறு தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த பாடுபட்டார் என்பதைக் கதையாக விவரிக்கிறார்.
இதற்காக அவர் உஸ்மானியப் பேரரசுக்குள் எவ்வாறு ஒரு முஸ்லிமாக மாறுவேடத்தில் ஊடுருவினார், அங்கு அவர் கருத்துவேறுபாடுகளைக் கண்டறிதல், புதிய பிரிவுகளை ஊக்குவித்தல், ஆதரவளித்தல், அதில் அவர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்தல் போன்றவற்றின் மூலம் எவ்வாறு தமது பணியை மேற்கொண்டார் என்பதை இஸ்லாமியக் கோட்பாட்டு மொழியிலும் படைப்பூக்க நடையிலும் சித்திரிக்கிறார்.
இதன் மூலம் சமகாலத்தில் அரபு நாடுகளிலும் முஸ்லிம்களிடமும்
பிற நாடுகளிலும் ஏகாதிபத்திய நாடுகள் செலுத்தும் ஆதிக்கத்தை
நாம் புரிந்துகொள்ள இந்த நூல் உதவுகிறது. இதுவே பண்பாட்டு அரசியலில் அக்கறையுள்ளவர்கள் இந்நூலைப் படிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
Reviews
There are no reviews yet.