Chillarai vanigam sirakka 7 vazigal
இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துவரும் சூழ்நிலையில் பல சில்லறை வணிகர்கள் தங்கள் கடைகளை பெரிய அளவிற்கு எடுத்துச் சென்றால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கவலையை விட்டுவிட்டு தங்கள் சொந்த பாணியையே பின்பற்றி இன்னும் சிறப்பாகவும், முறையாகவும் வியாபாரம் நடத்தி அதில் வெற்றிபெற வழி வகுக்கும் முறைகளை விளக்குவதுதான் “சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்” என்கிற இப்புத்தகம். நமது சில்லறை வணிகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பண்புகளை சில்லறை வணிகர்களுக்கு ஞாபகப்படுத்துவதுடன் நாட்டின் சில்லறை வணிக எதிர்காலப் போக்குகளையும் தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம். ஏழு வழிகளை தன் அனுபவத்தின் மூலமும் பல சில்லறை வணிகர்களுடன்கொண்ட உரையாடல்கள் மூலமும் அறிந்து தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார் இதன் ஆசிரியர் முனைவர் கிப்சன் ஜி வேதமணி. இவ்வழிகள் சில்லறை வணிகர்கள் சிறப்பாகவும், இலாபகரமாகவும் செயல்பட்டு வளர வழி வகுக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.சில்லறை வணிகத்தில் அந்நிய நாட்டு முதலீடு பற்றி பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வரும் இந்தவேலையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் சில்லறை வணிகர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறினால் அது மிகையல்ல.

சஞ்சாரம்
கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
Dictionary of Accountancy and Commerce
திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும்
My big book of ABC
ஸ்ரீ சுகர் ஜீவநாடி அற்புதங்கள்
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி 
Reviews
There are no reviews yet.